February 20, 2023 தண்டோரா குழு
பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜர் கல்லூரியில் வெள்ளி விழா நடைபெற்றது.விழாவிற்கு வந்திருந்தவர்களை கல்லூரி தலைவர் சேதுபதி வரவேற்று பேசினார்.
விழாவில்,சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
நிறைய மாணவர்களுக்கு உலகம் சரியாக தெரியவில்லை.நீங்கள் விரும்பிய கிரிக்கெட் வீரர், சினிமா நடிகர் சாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்;ஆனால், உங்களது வெற்றியை பற்றியை சிந்திப்பதில்லை.மற்றவர்களின் வெற்றியை கொண்டாடுகிறீர்கள்; பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற பலர் முயற்சிப்பதில்லை.நீங்கள் என்ன சாதிக்கப்போகிறீர்கள் என யோசியுங்கள். கல்லூரி படிப்பு தான் உலகுக்கு உங்களை அடையாளம் காட்டும்.
கல்வியில் ஆர்வம் காட்டுங்கள், படிப்பது எளிதாகும்.ஆர்வம் காட்டினால், மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.இதுவரை சாதிக்கவில்லை என்றாலும்,இனிமேலும் மாற்றிக் கொள்ள முடியும். வாழ்க்கையை மாற்ற நினைத்தால், நிச்சயம் முடியும்.ஒன்றுமே தெரியாது என்றாலும், தெரிந்து கொள்ள முயன்றால் ஆர்வம் இருந்தால் போதும் இணையத்தளத்தில் தேடித் தேடி அறியலாம். உலகில் உள்ள மக்கள் உதவி செய்வர்.
நம் உடல் ஒரு பொக்கிஷம், நமது அறிவாற்றலையோ யாரும் அளவிட முடியாது. அதை பயன்படுத்த பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சியால் எதையும் வெல்ல முடியும். எத்தனை வயதானாலும்,ஆற்றலோடு செயல்பட முடியும். நமது திறமையை நாமே சந்தேகப்படுவது தான் மிகப்பெரிய சோகம்.எது பிடிக்காதோ அதை செய்யுங்கள்.பிடிக்காத பாடத்தை அதிகாலையில் எழுந்து படியுங்கள்.தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும். உலகம் எவ்வளவு பெரியது என்பதை அறிந்து கொள்ள முடியும். உலகத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் மனிதனே இல்லை.
இவ்வாறு பேசினார்.
விழாவில்,டிஆர்டிஓ விஞ்ஞானி டி. டில்லிபாபு, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. சிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.