• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

February 25, 2023 தண்டோரா குழு

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம், ஐ வி கேர் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆரம்பித்து வைத்தார்.

கோயமுத்தூர் பத்திரிகைகாளர் மன்றம் , ஐ வி கேர் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியிருக்கின்றது. கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடந்த இந்த முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்திருக்கின்றார். ஐ வி கேர் கண் மருத்துவமனை மருத்துவர் மனோஜ் வாகில், மருத்துவர். ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவர்கள் குழு முகாமில் கண் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினர்.

நவீன யுகத்தில் அதிக நேரம் அலைபேசி, கணினி போன்ற டிஜிட்டல் ஸ்கிரீனிங்கில் செலவிடும் நிலையில், கண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்த கூடும். அதனை தவிற்கும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்த நிலையில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண் எரிச்சல், கண் சதை வளர்ச்சி ,கண் பிறை , வறட்டு கண் போன்றவற்றை அறிய ஏதுவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு இந்த இலவச கண் பரிசோதனை முகாம் பெருமளவில் உதவியிரிக்கின்றது.

பத்திரிகையாளர்களின் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னெடுப்புகளில் ஈடுபட்டிருக்கின்ற கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம், நலத்திட்ட பணிகளின் ஒரு பகுதியாக இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியிருக்கின்றது. இந்த முகாமில் கோயமுத்தூர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மன்ற தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் மோகன்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதுபோன்ற நலத்திட்ட பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதாக மன்ற நிர்வாகிகளும், பத்திரிகையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக ஐ வி கேர் கண் மருத்துவமனை நிர்வாகிகளும் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க