February 28, 2023 தண்டோரா குழு
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் நேரு நகர் லயன்ஸ் சங்கம்,கோயமுத்தூர் ராயல்,மற்றும் காளப்பட்டி சிறகுகள் ஆகிய சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டம் சார்பாக சமூகம் சார்ந்த பல்வேறு சேவைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் 324 சி மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் நேரு நகர் லயன் சங்கம் கோயம்புத்தூர் ராயல் லயன்ஸ் சங்கம் காளப்பட்டி சிறகுகள் லயன் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களின் 2023-ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோஇந்தியா அரங்கில் நடைபெற்றது.
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கவர்னர் ராம்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விழாவில் முன்னதாக வட்டார தலைவர் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பு தலைவர் செந்தில் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களை ஜி எம் டி ஒருங்கிணைப்பாளர் சூரி நந்தகோபால் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து ஜிஎல்டி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தின் விதிமுறைகளை எடுத்து கூறி பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பன்னாட்டு இயக்குனர் மதனகோபால்,முன்னாள் ஆளுநர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாபுதீன்,ஃபேரா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் நேரு நகர் நந்து,முதல் துணை நிலை ஆளுநர் ஜெயசேகரன்,இரண்டாம் துணை நிலை ஆளுநர் நித்தியானந்தம், ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், முன்னாள் ஆளுநர்கள் நடராஜன்,டாக்டர். பழனிசாமி, ஜீவானந்தம் சாரதாமணி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நேரு நகர் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தலைவர் ஹரிஷ், நிர்வாக செயலாளர் லோகநாதன் செயலாளர் ஆக்ட் மோகன்ராஜ் பொருளாளர் சோபன் குமார், லயன்ஸ் ராயல் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தலைவர் சுரேஷ்குமார் செயலாளர் அட்மின் விஜயராகவன் செயலாளர் ஆக்ட் கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் கார்த்திக் என்ற முருகேசன் ஆகியோரும், காளப்பட்டி சிறகுகள் புதிய நிர்வாகிகளாக தலைவர் திவாகர் செயலாளர் அட்மின் சம்பத்குமார் செயலாளர் ஆக்ட் சரவணகுமார் பொருளாளர் திருமலைசாமி ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், நிகழ்ச்சியில், லயன் பாஸ்கர் மற்றும் லயன் காளியப்பன் ஆகியோருக்கு சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.இதே போல கொரோனா கால நேரங்களில் சிறந்த சேவை பணியாற்றி பன்னாட்டு லயன்ஸ் சங்கம் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கி, வழங்கப்பட்டது.புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கல்வி உதவு தொகை மற்றும் மருத்துவ உதவி தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்டம் மாவட்ட அமைச்சரவை செயலாளர் ராஜ்மோகன், ஜி.இ.டி. ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாஸ்கர் பொருளாளர் கனகராஜ் மற்றும் மண்டல,வட்டார நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.