January 12, 2017 தண்டோரா குழு
வங்க தேசத்தில் மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் தெளிவாகப் பெரிய எழுத்தில் (Capital Letters) எழுத வேண்டும். இல்லையென்றால், மருந்துகளின் பெயர்களைத் தட்டச்சு செய்து தர வேண்டும் என்று அந்நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் என்ன எழுதிகிறார்கள் என்று புரியாத அளவிற்கு இருக்கிறது. அவர்களுடைய கையெழுத்தை மருந்துக் கடை ஊழியர்களும் புரியாமல் திண்டாடுகிறார்கள். சில நேரங்களில் தவறான மருந்துகள் தரப்படுவதால் பல பிரச்சினைகள் ஏற்படுவதும் உண்டு.
வங்க தேசத்தில் மருத்துவருடைய கையெழுத்தைப் புரிந்துகொள்ளாத மருந்துக் கடை ஊழியர் கொடுத்த தவறான மருந்தால் நேர்ந்த பிரச்னை காரணமாக ஒருவர் அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “மருத்துவர்கள், மருந்துகளின் பொதுவான பெயரை ஏன் எழுதுவதில்லை. மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் தெளிவாக எழுத வேண்டும் அல்லது தட்டச்சு செய்து தர வேண்டும். இந்த உத்தரவு அனைத்து மருத்துவர்களும் பின்பற்ற வேண்டும்.
இந்த உத்தரவை மருத்துவர்கள் பின்பற்றுகிறார்களா இல்லையா என்று சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் வங்க தேசத்தின் மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் பதிவாளர் மேற்கொள்வர். இந்த உத்தரவு நடைமுறையில் இருப்பது ஆறு வாரத்திற்குள் குறித்து உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.