• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

March 3, 2023 தண்டோரா குழு

யாராவது ஒரு இடத்தில் உண்மையாக இருக்க வேண்டும், ஒன்று மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் அல்லது அந்த பொறுப்புகளை வழங்கியவர்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும், எந்த இடத்திலும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் இல்லை என்றால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதுதான் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அதிமுகவிற்கு வழங்கியுள்ள தீர்ப்பு என்ன மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி வைப்பதோடு நான்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனையொட்டி திருமண விழா நடைபெறும் இடத்தில், நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,

நாளை இரவு கோவை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,ஞாயிற்றுக்கிழமை காலை 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதோடு,ஒருங்கிணைந்த திமுக சார்பில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தை துவக்கி வைத்து பரிசுகளை வழங்குவதாகவும், அதனைத் தொடர்ந்து வ உ சி மைதானத்தில் நடைபெறும் அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் மாலையில் கொடிசியாவில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் 2000 திமுக முன்னோடிகளுக்கு பொற்கொடிகளை வழங்கி விழா பேருரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்ட விரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளில் மின் இணைப்பைத் துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, செங்கல் சூளைகளில் ஒரு சிலவை சட்டவிரோதமாக இருக்கலாம் ஆனால் முழுவதுமாக சட்டவிரோதம் என்பது தவறான கருத்தாக பார்ப்பதாகவும், நீதிமன்றம் சுட்டிகாட்டி உள்ள இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் செங்கல் உற்பத்தியை தொடங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கு நல்ல தீர்வு வரும் எனவும் அனுமதி இல்லாத செங்கல்பட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அனுமதியோடு இருக்கும் செங்கல் சூளைகளுக்கும் அறிவுறுத்துடன் வழங்கப்பட்டு இன்று உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

காரைக்குடி அருகே ஒரு கிராமத்தில் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி வருவாய்த்துறை ஆவணங்கள் சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளரை மட்டுமே மின் இணைப்பு வழங்குவதற்கான ஆவணங்கள் அல்ல என குறிப்பிட்ட செந்தில் பாலாஜி வருவாய்த்துறை ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஏப்ரல் மே மாதங்களான கோடை காலங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய 4,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது இதற்காக டெண்டர் கோரப்பட்டு டெண்டர் இது செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த செந்தில் பாலாஜி, மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது என தெரிவித்தார்.

இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 99.7 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் 0.3 சதவீதம் தான் மீதம் உள்ளது எனவும் இன்னும் இரு தினங்களில் அந்த பணிகள் நிறைவடையும் எனவும் மின் இணைப்பு எணணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எந்த சிக்கலும் இல்லை அந்த பணிகளில் எந்த தொய்வும் இல்லை எனவும் பெயர் மாற்றுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஈரோடு கிழக்குத் தேர்தல் வெற்றி பயணம் என்பது வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொடக்கம் எனவும் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் முதல்வராக இருக்கின்ற வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள் எனவும் அதற்கான தொடக்கம் தான் ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு என தெரிவித்தார்.

நேற்று சிலிண்டர் விலை தொடர்பாக அதிமுகவின் கருத்து தெரிவிக்கவில்லை என கூறிய செந்தில்பாலாஜி, அதிமுகவின் பொருத்தவரை மக்களை பற்றி கவலை இல்லை, மக்களுக்கான வருங்கால திட்டங்களை பற்றி கவலை இல்லை, மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் நினைப்பதில்லை எனவும் அவர்களின் தேவை யார் டெல்லியில் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பதுதான் எனவும் யாராவது ஒரு இடத்தில் உண்மையாக இருக்க வேண்டும், ஒன்று மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் அல்லது அந்த பொறுப்புகளை வழங்கியவர்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும், எந்த இடத்திலும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் இல்லை என்றால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதுதான் அதிமுகவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வைக்கக்கூடிய தீர்ப்பு எனவும் விமர்சித்தார்.

மேலும் படிக்க