• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை தமிழக அரசின் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

March 4, 2023 தண்டோரா குழு

கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) கூறியுள்ளதாவது:

கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தலைமையில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வர்கள், முத்திரை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் இணைந்து பிப்ரவரி மாதம் முழுவதும் பல்வேறு தொழிலாளர் நலசட்டங்களின் கீழ் சிறப்பு கூட்டாய்வுகள் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது எடையளவு சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் நியாய விலை கடைகளில் எடை குறைவு, முத்திரை -மறுமுத்திரை இடப்படாத எடை அளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்றுகாட்டி வைக்கப்படாமை, சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது தொடர்பாக 49 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. மேலும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் பொட்டலமிடுவதற்கான உரிய பதிவு சான்று பெறதாது, உரிய அறிவிப்பு இல்லாதது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்றவைகள் தொடர்பாக 19 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கடை நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் தமிழ் பெயர் பலகை வைக்காத 25 நிறுவனங்கள் மீதும், பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத 14 நிறுவனங்கள் மீதும் பதிவேடுகள் பராமரிக்காத 60 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. 19 உணவு நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் நிறுவனங்களில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச கூலி வழங்காத 1 நிறுவனத்தின் மீது முரண்பாடு கண்டறியப்பட்டு ரூ. 39,414 குறைந்தபட்ச கூலி நிலுவை தொகை சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1 குழந்தை மற்றும் 4 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டு 5 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய மற்றும் ஒப்பந்ததாரர்கள் மு்லம் 5க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய வேலை அளிக்கும் நிறுவனங்கள் பதிவு சான்று பெற வேண்டும். அனைத்து தொழில் நிறுவனங்களும் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை தமிழக அரசின் labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க