March 6, 2023 தண்டோரா குழு
சமூக ஒற்றுமைக்கான பிரச்சார பயண நிறைவு விழா பொதுக்கூட்டம்சாரமேடுரோடு கரும்புக்கடை பகுதியில் நடைபெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் நிரைவையொட்டி சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயணம் தமிழகம் முழுவதும் பயணித்து கோவையில் முடிவடைகிறது. அதன் நிறைவு பொதுக்கூட்டம் நேற்று மாலை
தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் இளம் சாதனையாளர்கலுக்கும் விருது வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் தேவாலயம் தலைவர் அருட்தந்தை சார்லஸ் N வின்சென்ட்,பிரபஞ்ச அமைதி சேவாஷ்ரமம் நிறுவனர் குருஜி.சிவ ஆத்மா, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர் ராஜேஷ், (சி.எஸ்.ஐ.ஆல் சோல்ஸ், தேவாலயம்)ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கலந்து வாழ்த்துரை வழங்கிய குருஜி சுவாமி சிவாத்மா,
இந்த ஊரை மாநிலத்தை நாட்டை உலகை பிரபஞ்சத்தை அமைதியாக இருக்க உழைக்கும் எனக்கு இம் மேடை உற்சாசத்தைத் தருகிறது.மன ஒற்றுமை இருந்தால் மதத் துவேசத்தைக் களையலாம்.எல்லா மதமும் அன்பையே போதிக்கின்றன.எவரது மனதில் அமைதிக் குறைவாக உள்ளதோ அவர்களுக்குத்தான் மதப் பிரச்சினை
இன்ன பிற பிரச்சினைகள் வருகின்றன.
என் போன்றவர்களுக்கோ ஃபாதிரியார் சார்லஸ் வின்சென்ட் போன்றவர்களுக்கோ நண்பர்கள் அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ இல்லை.இதோ இங்கேதான் இருக்கிறீர்கள்.
மாதத்தில் ஒரு நாளாவது அல்லது ஒரு மணி நேரமாவது சமய நல்லிணக்கத்திற்காக ஒன்று கூடினாலே அது நடைபெற்று விடும். என தனது உரையில் குறிப்பிட்டார்.
கோவை ரேஸ் கோர்ஸ் சி எஸ் ஐ ஆல்சோ தேவாலயத்தின் தலைமை ஃபாதிரியார் சார்லஸ் வின்சென்ட்பேசுகையில்,
காலச் சூழலுக்கேற்ப நமது மதிப்பீடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.நமது முன்னோர்கள் சொல்லும் கதையைக்கூட அதே பாணியில் காலங்காலமாக கூறாமல் அக் கதையைக் கூட இன்றையக் காலச்சூழலுக்கேற்றார் போல பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும்.சாலிடாரிட்டி அமைப்பு சமூக ஒற்றுமைப் பிரச்சாரம் தமிழகமெங்கும் சுற்றி இன்று கோவையில் நிறைவு செய்துள்ளது. உங்களை மனமார வாழ்த்துகிறேன். மனித நேயத்தோடு ஒற்றுமை அன்பு போன்றவற்றைக் கொண்டு வகுப்பு துவேசங்களை விரட்டவேண்டும்.உங்களோடு நாங்கள் என்றென்றும் இருப்போம் என வாழ்த்தினார்.
மேலும், மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ (மாநிலத் தலைவர், JIH தமிழ்நாடு & பாண்டிச்சேரி.),மௌலவி முஹம்மது நூஹ் மஹ்னரி (பேராசிரியர், அஸ்ஸலாம் அரபிக் கல்லூரி, திருச்சி),மௌலவி முஹம்மது நாஸர் புகாரி மாநிலச் (செயலாளர், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு- தமிழ்நாடு) ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.