• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காந்தேரி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்படைப்பு

January 12, 2017 தண்டோரா குழு

கடற்படைப் பயிற்சி மற்றும் சோதனைக்காக பாம்ரே காந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஷ் கடற்படை வசம் வியாழக்கிழமை ஒப்படைத்தார்.

பிரான்ஸ் மற்றும் இந்தியா கூட்டு தொழில்நுட்பத்தில் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைக்க 2005-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் உள்ள எம்.டி.எல். கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்படுகினறன.

இதில் முதல் நீர்மூழ்கிக் கப்பல் கல்வாரி கடந்த ஆண்டு வடிவமைக்கப்பட்டு, தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டில் பயிற்சி மற்றும் சோதனையில் உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது நீர்முழ்கியின் கட்டுமானம் முடிக்கப்பட்டு , மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே இந்த கப்பலை கடற்படையிடம் ஒப்படைத்தார். இந்த கப்பல் பயிற்சி மற்றும் சோதனைக்காக கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு “காந்தேரி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

“மேம்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிரிக் கப்பல்களைக் குறி வைத்து தாக்கும் திறன் கொண்ட இந்த வகை நீர்மூழ்கிகள், கடலில் வைத்து சில காலம் பயிற்சி மற்றும் பரிசோதனைகள் கடற்படையால் நடத்தப்படும்.

அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் நாட்டிற்காக கடற்படையில் இணைக்கப்படும்” என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க