• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரை தொடர்ந்து கோவையிலும் பீகார் குழுவினர் ஆய்வு

March 6, 2023 தண்டோரா குழு

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.இதில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தகவல்கள் பரவி வந்தது.

ஆனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் கலெக்டர்கள் இது வதந்தி என தெரிவித்து வந்தனர்.இதற்கிடையே காட்டுத்தீ போன்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவியதால்,வடமாநில தொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதனால் தமிழக முதலமைச்சர் வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில்,வீடியோக்கள் வதந்தி என அந்தந்த மாவட்டங்களில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தவிட்டார்.

இதுபோல் வதந்தி பரப்புகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.இதற்கிடையே வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிற நிறுவனங்களுக்கு சென்று போலீசார் இது தொடர்பாக விளக்கம் அளித்தனர். மேலும், வதந்தியை நம்ப வேண்டாம் என இந்தியிலும் அவர்களுக்கு புரிகிற வகையில் விளம்பர பதாகைகள் மூலமாகவும்,இந்தியில் பேசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

மேலும்,வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையமும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இதற்கான எண்களையும் ஒவ்வொரு நிறுவனங்களில் வேலை செய்து வருகிற வடமாநில தொழிலாளர்களிடம் கொடுத்துள்ளனர்.இதனால் கோவை, திருப்பூரில் எந்தவித அச்சமும் இன்றி வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று திருப்பூருக்கு பீகாரில் இருந்து பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன்,தொழிலாளர் ஆணையர் அலோக்குமார்,சிறப்பு பணி படை வீரர் சூப்பிரண்டு சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி.கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வருகை தந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று கோவை மாவட்டத்தில் பீகார் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம் அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஞ்சாலைகள், தொழில்நிறுவனங்களில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

மேலும் படிக்க