• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் – பொன்.குமார்

March 7, 2023 தண்டோரா குழு

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமான துறைக்கு மத்திய,மாநிலத்தில் தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்.குமார் கோவையில் வலியுறுத்தி உள்ளார்.

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாவட்ட மாநாடு கோவை கொடிசியாவில் வரும் 12 ந்தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்.குமார் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாவட்ட மாநாடு கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளதாகவும்,சுமார் ஐயாரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான துறை சார்ந்த அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர்கள் முத்துச்சாமி, வெள்ளகோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும்,அவர் கூறினார்.

குறிப்பாக மாநாட்டில் கட்டுமானத்துறையை ஊக்கப்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும்,மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் மாநாடு நடைபெற உள்ளதாக கூறினார்.குறிப்பாக நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமான துறைக்கு மத்திய,மாநிலத்தில் தனி அமைச்சகம் வேண்டும், கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய உற்பத்தியாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் பாதிக்காத வகையில் விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும், பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும், வீடு மற்றும் வீட்டுமனை விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் நிலத்தரகர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

வட மாநில தொழிலாளர்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,வடமாநில தொழிலாளர்கள் எந்த வித பிரச்னைகளும் இல்லை எனவும்,சிலர் தேவையற்ற வதந்திகளை பரப்புவதாக கூறிய அவர்,வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்புடன் உள்ளதாகவும், அவர்களும் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

இந்த சந்திப்பின்போது கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் யுவராஜ் கண்ணன் ஜெகதீசன் ஸ்ரீதர் ராமச்சந்திரன் ராஜதுரை கணேஷ்,காவேரி பைப் நிர்வாக இயக்குனர் வினோத்சிங் ரத்தோர், பாலன், பாலகிருஷ்ணன், முகமது ரஃபீக், முத்து பிரின்ஸ், நாகராஜ், ராணி மலர்விழி, எச்.எம்.எஸ் மாநில செயலாளர் ராஜாமணி, செய்தி தொடர்பாளர் ராஜா, கவிஞர் குரு நாகலிங்கம், உட்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க