• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“ஜெயலலிதாவைவிட என் மனைவி 1000 மடங்கு Power Ful” – அண்ணாமலை

March 9, 2023 தண்டோரா குழு

கோவை சிட்ரா கலையரங்கில் சாதனை மகளிர் சங்கமம் என்ற அமைப்பின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் 12 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

என்னுடைய பேருக்கு பிறகு எம்பி, எம்.எல்.ஏ எனக்கு ஓடுவதற்காக நான் இங்கு வரவில்லை பாஜக வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு, அதற்கான முயற்சி தான் தன்னிடம் உள்ளது. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளர கூடாது அவ்வாறு வளர்ந்தாலும் கூட அது தொடர்ந்திருக்க கூடிய வளர்ச்சியாக இருக்காது.

பாஜக தமிழகத்தில் தனக்குரிய இடத்தை கண்டுபிடித்து தமிழக மக்களின் அன்பை பெற்று அது வளர வேண்டும். நான் நேற்று மதுரை சென்னை இடங்களில் என்னுடைய கருத்தாக, என்ன பேசி இருக்கின்றேனோ அது தான் என்னுடைய கருத்து அதிலிருந்து ஒரு படி மேலும் கிடையாது கீழும் கிடையாது. அதேபோல் என்னைப் பற்றி சிலர் ஏதாவது கூறினால் அந்த கருத்து என்னுடைய கருத்தை பாதிக்காது. நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன், அவர்கள் அவர்களுடைய கருத்தில் உறுதியாக இருக்கட்டும் அதில் எந்த ஒரு தவறும் இல்லை.

வேறு வேறு கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் ஒரு வளர்ந்த கட்சியில் இணைந்து தலைவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பாஜக தொண்டன் அவ்வாறு இல்லை. யாரும் போகாத பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்களுடைய பாதை தனியாகத்தான் இருக்கும். எனவே இதை யாருடனும் ஒப்பிட வேண்டாம். பாஜக அதிமுகவுடன் ஒப்பிடாதீர்கள், கூட்டணி கட்சிகளுடன் ஒப்பிடாதீர்கள் ஆளும் கட்சியுடன் ஒப்பிடாதீர்கள். பல்வேறு கட்சிகளில் இருக்கக்கூடிய தலைவர்கள் அந்த கட்சி வளர்ந்த பிறகு தான் அதில் இணைந்துள்ளார்கள். ஆனால் பாஜக தொண்டர்கள் அவ்வாறு இல்லை எப்பொழுது பாதுகாக்க ஆட்சிக்கு வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவில் இருக்கக்கூடிய தலைவர்கள் அதிமுகவை பாஜகவுடன் ஒப்பிட்டால் அது சரியான ஒப்பிடல் இல்லை. அதேபோல் மற்றொரு கட்சித் தலைவர்கள் ஒப்பிட்டாலும் அதுவும் சரியான ஒப்பிடல் இல்லை. எங்களுடைய பாதை தனித்தன்மையான பாதை. நான் இதற்கு மாற மாட்டேன் நான் இவ்வாறு தான் இருப்பேன் என்னுடைய தலைமையில் கட்சி இவ்வாறு தான் இருக்கும். அப்போது இந்தக் கட்சியில் பல்வேறு விஷயங்கள் மாற்றங்கள் செய்யப்பட தான் வேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அதற்கான முயற்சியை முன்னெடுக்க தான் வேண்டும் ரத்தம் வரத்தான் செய்யும், அவ சொற்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் அவமானங்களை சந்தித்து தான் ஆக வேண்டும் அனைவரின் விமர்சனங்களையும் கடந்து தான் செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் வளர்ந்த விதம் வேறு பாஜக வளர்ந்து வரும் விதம் வேறு. நான் நேற்று கூறியது, அரசியல் கட்சியில் சில கட்சிகளில் மேனேஜர்கள் உள்ளார்கள் சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கிறார்கள் தலைவர்கள் ஒரு முடிவை எடுக்கும் பொழுது துணிந்து எடுக்க வேண்டும் அதில் தவறு நடந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டும் ஜெயலலிதா அம்மையாருக்கு டெபாசிட் போன பிறகும் துணிந்து நின்று வென்றார்கள். ஒரு தலைவர் என்பவர் இவ்வாறு தான் நிற்பார்கள், நானும் அப்படிப்பட்ட பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கின்றேன் பாரதிய ஜனதா கட்சியின் காலம் வந்து விட்டதாக கருதுகிறேன், மக்கள் அதற்காக தயாராக இருப்பதாக நான் பார்க்கின்றேன். என்னைப் பொறுத்தவரை எனது தாயார் ஜெயலலிதா அம்மையாரை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தவர்கள். என்னுடைய மனைவி ஜெயலலிதா அம்மையாரை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவர்கள். பாஜக அதிமுக கூட்டணியின் மகிமை என்னவென்றால் நாங்கள் அனைவரும் எங்களது சொந்த கருத்துக்களை பேசுகிறோம். அண்ணாமலை சொல்வதற்காக அதிமுக கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை அதேபோல் அதிமுக சொல்வதற்காக பாஜக எதிர் கருத்து சொல்ல அவசியம் இல்லை. யாரும் இங்கு யாருக்கும் சாமரம் வீசுவதில்லை.

ஈவிகேஎஸ் ராகுல் காந்தியை விட ஸ்டாலின் சிறந்தவர் என கூறுவது போன்றெல்லாம் நாங்கள் கூற மாட்டோம். 2024ம் ஆண்டுக்கான தேர்தல் மோடிக்கான தேர்தல். பத்தாண்டுகள் அவர் ஆட்சி செய்து விட்டார் இன்னும் ஐந்து ஆண்டுகால வேண்டுமா பத்து ஆண்டுகாலம் அவர் செய்ததற்கான சான்றுகளை வழங்க வேண்டியது எங்களுடைய கடமை. தமிழ்நாட்டில் அவதூறு நோட்டீஸ் போடாமல் அரசியல் செய்கின்ற ஒரே ஆள் நான்தான். என்னைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் எவ்வாறு எழுதினாலும் சரி, அது குறித்து அவதூறு நோட்டிஸ் நான் தரமாட்டேன் அதை மக்கள் மன்றத்தில் விட்டு விட வேண்டும்.

ஆன்லைன் ரம்மி ஆளுநர் நிலை குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர் ஆன்லைன் ரம்மியை பாஜக எதிர்க்கிறது என நான் ஆளுநரை சந்தித்தபோது கூறினேன். ஆளுநரை பொருத்தவரை அவர் என்ன கூறி இருக்கலாம் என்றால் ஆன்லைன் ரம்மி தடை ஒப்புதல் என்து அது ஒரு பில் ஃபால்டி, மீண்டும் அந்த பில்லை சரி செய்து தரக்கூடிய ஒரு வாய்ப்பு, ஈகோ அடிப்படையில் அந்த பில்லுக்கு கையெழுத்திட வேண்டுமென்றால் ஆளுநர் கையில் திட்டு தான் ஆக வேண்டும் அது அரசியலமைப்புச் சட்டம். ஆனால் இதே சட்டத்தை ஆளுநர் கையெழுத்திட்டால் அது உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் தான் நிறுத்தி வைக்கப்பட போகிறது.

யாரோ ஒருவருக்காக தவறான சட்டத்தை கொண்டு வந்து ஆளுநரிடம் கையெழுத்திட வேண்டும் என நிர்பந்திக்க கூடாது. எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் மறுபடியும் ஆராய்ந்து அந்த சட்டத்தை சரி செய்ய வேண்டும். அதேபோல் ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை அப்படியே மக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதனை அனைவரும் தெரிந்து கொள்ளட்டும். அமைச்சர் பொன்முடி ஓட்டு போட்டு கிழுச்சிட்டீங்க என பேசியது குறித்து கருத்து தெரிவித்த அவர் பொன்முடி அவ்வாறு பேசுவது ஒன்றும் புதிதல்ல எனவும் மக்களுக்கு அது கேட்டு கேட்டு பழக்கம் ஆகிவிட்டது முதலமைச்சர் அதற்கு ஒரு கண்டன குரல் கூட கொடுக்கவில்லை இதனை மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் விட்டுவிடலாம்.

கட்சியில் இணைவது போவது எல்லாம் சகஜம். பாஜகவில் இரண்டாம் மூன்றாம் நான்காம் கட்டத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் செல்வது பெரிய செய்தியாக வருகிறது என்றால் உண்மையாகவே பாஜகவை சீரியசாக எடுத்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம். தற்போது திமுகவில் இருக்கக்கூடிய பாதை அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். நான் கூறிக் கொள்வது எல்லாம் அனைவரும் நன்றாக இருங்கள் போகின்ற இடத்தில் விசுவாசமாக இருங்கள் அரசியலில் என்ன சாதிக்க விரும்பினீர்களோ அதனை அந்த கட்சியில் இருந்து சாதியுங்கள். மக்களுக்கு நல்லது நடக்கட்டும். பாஜகவின் ஐடி விங் என்பது உணர்வுபூர்வமாக செயல்படக்கூடிய ஒன்று. உங்களுக்கு ஒரு ரகசியத்தை கூறுகிறேன் பாஜகவில் தொண்டனாக இல்லாத ஒருவர்தான் பாதி ஜடி விங் வேலையை செய்வார். உறுப்பினர் அட்டை இல்லாதவர் தான் நல்ல நாடு அமைய வேண்டும் என அதனை செய்து கொண்டே இருப்பார். இன்னும் ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

பெரிய பெரிய தலைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அரசியல் கட்சி என்பது அப்படி தான் இருக்கும் அவனுக்கு பேரு வருவார்கள் நான்கு பேரும் செல்வார்கள் தொடர்ந்து இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கும். ஒரு அகில இந்திய கட்சிக்கு பெரிய ஆளு சேர்ப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. அதனால் தமிழகத்திற்கு என்ன நடக்க வேண்டும் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. அதனை நடத்தி காட்ட வேண்டும் என்றால் அதற்கும் தயாராக இருக்கின்றோம். ஊழல் செய்தல் அமலாக்கத்துறை வருகிறது, காங்கிரஸ் கட்சியினர் ஆம் ஆத்மி கட்சியின் மணீஸ் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது சரி என கூறுகிறார்கள்.

அதே சமயம் முதலமைச்சர் அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை தவறான பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் எனவே முதலில் இவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும். காங்கிரஸ் கட்சியின் கே எஸ் அழகிரி அமைப்பினர் ஆம் ஆத்மி கரப்ட் பாஜக நடவடிக்கை சரி என கூறுகிறார்கள் ஆனால் கூட்டணியில் இருக்கக்கூடிய முதலமைச்சர் தவறு எனக் கூறுகிறார், எனவே அவர்கள் கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது எங்களை பொறுத்தவரை ஊழல்வாதிகளை அரசு சார்ந்த ஏஜென்சிஸ் நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க