March 10, 2023 தண்டோரா குழு
Lபேஷின்ஷா, ஒரு ஏஐ ஆல் இயங்கும் சர்வதேச பேஷன் பிராண்ட் மொத்த வணிகர்கள், சில்லறை வணிகர்களுக்கு இடையேயான பி2பி சந்தைத்தளம். தற்போது, 100க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு பில்லியன் டாலர் சர்வதேச வர்த்தக தேவை வாய்ப்பை பெற ஏஐ உற்பத்தி தளத்தை ஏற்படுத்தியுள்ளது பேஷனின்ஷா.
இதன் விளைவாக பேஷின்ஷா சப்ளையர் சாய்ஸ்ரீ எக்ஸ்போர்ட்ஸ் மாதந்தோறும் ஒரு கோடி ருபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.ஆள் முறை விநியோத்தொடரிலிருந்து தானியங்கி முறைக்கும் மாறியுள்ளது.இத்தகைய குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது, பேஷின்ஷாவின் புதுமையான தொழில்நுட்ப அடிப்படையிலான உற்பத்தி முறைகள், சர்வதேச பேஷன் பிராண்ட்கள், சந்தைப்படுத்துதல் மற்றும் குழுவாக ஒருங்கிணைந்து செயல்படுதல் போன்ற தளத்தினை பெற்றது தான்.
இந்த பி2பி ஆயத்த சந்தையானது, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களை, பிராண்டுகளுடன் இணைத்து, வளர்ச்சியை ஊக்கப்படுத்தி லபகரமாக இயங்கச் செய்கிறது. இப்பகுதி சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வேகமாக வளர உதவுகிறது. 5 மடங்கு வருவாய் உயர்த்தி, நீண்ட கால வெற்றிக்கும், விரிவாக்கத்துக்கும் தயார்படுத்துகிறது.
திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு ஒரு டிஜிட்டல் தளத்தை தருவதால், வணித்தில் புதிய திசையையும், விரிவாக்கத்தையும், பெரும் தொழில் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் உற்பத்தியை அதிகரிக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறது. சர்வதேச அளவிலான பிராண்ட்களுடன் இணைந்து செயல்படவும், முழுமையான உற்பத்தி மேம்பாட்டிற்கும், உற்பத்தி முறைக்கும் அதை விநியோகிக்கவும் உதவுகிறது.
பேஷின்ஷா தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான பவன்குப்தா பேசுகையில், “
திருப்பூரில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் பங்குதாரர்களாக இணைந்து செயல்படுவதில் பெருமைப்படுகிறோம். இந்த நிறுவனங்களை நிபுணத்துவம் பெற வைப்பதால், சர்வதேச விநியோகத்தொடரில் ஒரு முக்கிய இடத்தை திருப்பூர் பெறும். இவர்களது வளர்ச்சிப்பாதையில் எங்களால் உதவ முடியும். ஒரே ஆண்டில் எங்களது சப்ளை பங்குதாரர் ஸ்ரீசரவணா பேஷன்ஸ், உற்பத்தியை உயர்த்த 100 இயந்திரங்களிலிருந்து 200 இயந்திரங்களாக இரட்டிப்பாக்கியுள்ளனர்.
எங்களது ஏஐ சார்ந்த டைனமிக்க டிஎன்ஏ மற்றும் தரச் செயலி மென்பொருளை அவர்களது தொழிற்சாலையில் பயன்படுத்தியதால் இது சாத்தியமானது. புதிய தலைமுறை தொழில்நுட்பத்தால் எங்களால் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்திமுறையை மேம்படுத்தி, நேரத்தை மிச்சப்படுத்தி, லாபத்தை உயர்த்திக் காட்ட முடிந்தது. அதோடு, சர்வதேச சந்தையில் உள்ள போட்டிகளை திறம்பட சமாளிக்கவும் தயார்படுத்த முடிந்தது,” என்றார்.
பேஷின்ஷாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியுமான அபிஷேக் சர்மா பேசுகையில்,
” சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் நீண்ட கால பங்குதாரர்களாக, இருதரப்பினரும் பயன்பெறும் வகையில், நிலையான மதிப்புமிக்க உறவாக மாறி வருகிறோம். இந்த நிறுவனங்களுடன் பங்குதாரர்களாக இணைந்து செயல்படுவதால் அவர்களின் சவால்கள், தேவைகள், தனிப்பட்ட தீர்வுகளை அளித்து,, வணிகத்தில் வளர்ச்சி பெற எங்கள் தளத்தில் உதவுகிறோம்,” என்றார்.
பேஷின்ஷா இணை நிறுவனர் மற்றும் தலைமை வணிக அதிகாரி ஜமில் அகமது பேசுகையில்,
” பேஷின்ஷா ஒரு தொழில்நுட்ப தளம் மட்டுமல்ல; சிறு,நடுத்தர தொழில்நிறுவனங்களி்ன் உற்பத்தி பங்குதாரர். இவர்களுக்கு தற்கால நவீன தொழில்நுட்பத்தை தருவதோடு, வணிக வளர்ச்சிக்கும், சந்தையை சமாளிக்கவும், ஆதரவு பெறவும் பல்வேறு தொழில் நிபுணர்களின் உதவியை பெற்றுத்தருகிறோம். எங்களது பங்குதாரர்கள் போட்டியிடவும், திறம்பட செயல்படவும், வணிகத்தில் வெற்றி பெறவும் உதவுகிறோம்,” என்றார்.