March 12, 2023 தண்டோரா குழு
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் எம்.கே என்டர்டைன்மென்ட் இணைத்து நடத்தும் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் முதல் நேரடி இசை கச்சேரி அறிமுக நிகழ்ச்சி ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்றது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை நிகழ்ச்சியின் தொடக்க விழா ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.’ஆயிரத்தில் ஒருவன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி மே 27 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் வழங்கும் இந்த இசை நிகழ்ச்சி எம்.கே என்டர்டைன்மென்ட் புரொடக்ஷன் ஏற்பாடு செய்துள்ளது.
2006 ஆம் ஆண்டு வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி., அதன்பிறகு,’தெய்வ திருமகள்’, ‘மதராசப்பட்டினம்’,’ராஜா ராணி’போன்ற படங்களின் மூலம் ஆண்டுதோறும் மனதை உருக்கும் மெல்லிசை பாடல்களை இசையமைத்து வந்தார். தெறி’,’சூரைப் போற்று’, ‘சர்தார்’ மற்றும் சமீபத்தில் ‘வாத்தி’. அவரது பாடல்கள் மற்றும் அவர் இசையமைத்த பின்னணிக்கு தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் சமூகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
கச்சேரிக்கான டீசர், டிக்கெட்டுகள் மற்றும் அதிகாரப்பூர்வ போஸ்டர் ஜி.வி.பிரகாஷ் அவர்களால் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அதனை ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி,இக் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா,எம்.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.வி.மணிகண்டன் முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அனைவரின் சார்பாகவும் ஜி.வி.பிரகாஷ்குமாரை வரவேற்று, ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனத்தில் இந்த இசை நிகழ்ச்சியைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் வாழ்க்கையிலும் தொழிலிலும் பெரியவராகவும், மென்மேலும் வளர வாழ்த்தி பேசினார்.
மேலும் அவர் பேசுகையில்,
மாணவர்கள் பல்வேறு திறன்களை இளம் பருவத்தில் வளர்க்க வேண்டும். படிப்புடன் பன்முக திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். வரும் வாய்ப்பை மாணவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். புதிய திறனை மாணவர்கள் வளர்க்க வேண்டும் எனக் கூறினார்.
வெளியீட்டு விழாவில் பேசிய எம்.கே. எண்டர்டைன்மென்ட் எம்.டி., ஸ்ரீ.மணிகண்டன்,
கோவையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவதை பெருமையாக கருதுவதாகவும், கோவை மக்களை மகிழ்விக்கும் வகையில், எம்.கே.என்டர்டைன்மென்ட் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற பல புதிய அறிவிப்புகள் வரும் என்றும் உறுதியளித்தார்.
உற்சாகமான மாணவர்களிடம் உரையாற்றிய ஜி.வி.பிரகாஷ்,
பொதுவாக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கச்சேரிகள் அறிவிக்கப்படும், ஆனால் இன்று மாணவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் எனக்கு எப்பொழுதும் வி.வி.ஐ.பி.க்கள் என்று கூறினார், ஏனெனில் மாணவர்களின் முன் நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த உற்சாகத்தை தருகிறது. அதேபோல் மாணவர்களின் முன் நிகழ்ச்சியினை நடத்தினால் நல்ல ஆற்றலையும் தருகின்றன. பள்ளியிலும் கல்லூரியிலும் எப்பொழுதும் சராசரியான மாணவனாக இருந்துள்ளேன்.
பெற்றோர்களை ஆசிரியர்கள் அழைக்கும் வாய்ப்பை தராமல் நடந்து கொள்வேன். அதேபோல பல வாய்ப்புகளை இக்காலங்களில் சரியாக பயன்படுத்தியுள்ளேன். மாணவர்கள் சாதாரணமாக படியுங்கள். உங்கள் பன்முகத்திறன் வாருங்கள். “முதலாவது உங்கள் முன்னிலையில் இதை வெளியிட்டது எப்போதும் ஸ்பெஷல் தான், உங்களுக்கெல்லாம் காத்திருப்பேன்” என்று ஜிவி.பிரகாஷ் கூறினார்.