• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் காவேரி குரூப் வினோத் சிங் ரத்தோருக்கு விருது !

March 12, 2023 தண்டோரா குழு

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்ட மாநாடு கூட்டடமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் ராமச்சந்திரன் தலைமையில்கோவை கொடிசியா வளாகத்தில்
நடைபெற்றது.

காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் மாநாட்டின் கொடியை ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டில் வரவேற்பு குழு செயலாளர் ராஜதுரை வரவேற்று பேசினார். கூட்டடமைப்பின் தலைவரும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர்கள் முத்துச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார். இம்மாநாட்டில் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமான துறைக்கு மத்திய,மாநிலத்தில் தனி அமைச்சகம் வேண்டும் கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய உற்பத்தியாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் பாதிக்காத வகையில் விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும்,பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும், வீடு மற்றும் வீட்டுமனை விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் நிலத்தரகர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து மாநாட்டில் சிறந்த சமூக சேவகர் விருது காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோருக்கு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த தொழில் முனைவோர் விருது பி ஆர் டி குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் பரந்தாமன், வாழ்நாள் சாதனையாளர் விருது வி கே வி குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் வி கே வி சுந்தரராஜ்,சிறந்த வீட்டுமனை அபிவிருத்தியாளர் விருது ஜே எம் ஜே ஹோம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் தாமஸ் பி வில்சன், சிறந்த அடுக்குமாடி குடியிருப்பு அபிவிருத்தியாளர் விருது ஸ்ரீ வாஸ்தா ரியல் எஸ்டேட் இணை நிர்வாக இயக்குனர் ராஜிவ்ராமசாமி மற்றும் இளம் தொழில் முனைவர்களுக்கான விருதுகள்
அரவிந்த் குமார் மற்றும் வெற்றி செல்வன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மாநாட்டில் சுமார் 1500க்கும் மேற்பட்ட கட்டுமான துறை சார்ந்த அமைப்பினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க