• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபோன் வடிவ துப்பாக்கிகள் விற்பனை பயங்கரவாதிகள் குறித்து ஐரோப்பா உஷார்

January 13, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் “ஐ போன்” வடிவிலான துப்பாக்கிகள் விற்பனை ஆவதையடுத்து, ஐரோப்பிய நாடுகளில் அவற்றைப் பயங்கரவாதிகள் கள்ளத்தனமாகக் கடத்தி வரக்கூடும் என்று உஷார்ப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னசொட்டாவில் உள்ள ஐடியல் கன்செல் என்ற நிறுவனம் இந்த ஐபோன் வடிவத் துப்பாக்கியைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த வாரம் சந்தைக்கு வருகிறது.

9 மில்லிமீட்டர் ரக இரட்டைக்குழல் துப்பாக்கி போல் இருக்கும் இந்த ஐபோன் துப்பாக்கி ஒரு சில நாட்களில் ஐராப்பாவில் உள்ள சமூக விரோதிகளுக்கு விற்பனை செய்யப்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான துப்பாக்கி விற்பனைக்கு வந்தால், பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று ஐரோப்பிய காவல்துறை அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இதனிடையில் இத்துப்பாக்கிகள் கள்ளத்தனமாக விற்பதையும் தடுக்க போலீசார் முயன்று வருகின்றனர்.

இந்த ஐபோன் துப்பாக்கியை வாங்குவதற்காக அமெரிக்காவில் 12 ஆயிரம் பேர் ஆர்டர் கொடுத்துள்ளனர். இதை ஐபோனை எடுத்து வருவது போல் கொண்டுவந்து, ஒரு பட்டனைத் தட்டியதும், துப்பாக்கியாக மாறிவிடும்.

இந்தக் கருவியின் விலை ரூ. 27,500 (330 பவுண்டுகள்). இது ஐபோன் விலையை விடக் குறைவானது. விலை மிகவும் மலிவாக இருப்பதால் ஏராளமாக விற்பனை செய்யப்படக் கூடும் என்ற இன்னொரு கவலை அளிக்கிறது.

இது குறித்து பெல்ஜியம் நாட்டின் அதிகாரிகள் கூறுகையில், “கைபேசி போன்ற வடிவில் உள்ள இந்த துப்பாக்கியை எளிதாக மறைத்து எடுத்து வர முடியும். அதைப் பார்க்கும்போது யாரும் அது துப்பாக்கி என்று சொல்ல முடியாதுஇதுவரை அது போன்ற கைத்துப்பாக்கிகளின் அச்சுறுத்தல் இருந்ததில்லை. ஆனால்,தற்போது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

“ஏராளமானோர் ஐபோன் வைத்திருப்பதால், இந்தத் துப்பாக்கியை வைத்திருப்போரை எளிதில் அடையாளம் காண முடியாது” என்று நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க