March 24, 2023 தண்டோரா குழு
சூரிய ஒளியிலிருந்து ஆற்றல், மின்சாரம் பெறும் பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இந்தியாவில் சூரிய ஆற்றல் மின் ஒருங்கிணைப்பு அமைப்பாக உள்ள ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட், பல ஆண்டுகளாக உலகச்சந்தையில் முன்னணி இடம் பிடித்துள்ளது.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதன் நிர்வாக இயக்குனர் ஆர். செல்லப்பன் கூறுகையில்,
இந்தியாவின் துாய ஆற்றல் உற்பத்தியில் நம்பகமிக்க தலைமையைக் கொண்டுள்ள ஸ்வெலக்ட், 400 மெகாவாட் சூரிய ஒளி மின்னாற்றலை தரும் சோலார் பேனல்களை அமைத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான துாய்மையான மின்னாற்றலை பெறவும், இந்த புவி உலகம் பசுமையானதாகவும் துாய்மையானதாகவும் இருக்க உதவி வருகிறது.
மேக் இன் இன்டியா – உயர்தர மின்சார பொருட்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வரும் ஸ்வெலக்ட், 1984ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளாக தரமான பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களைக் கொண்ட குழுவுடன், நிபுணத்துவம் பெற்றதாக உள்ளது. மேக் இன் இன்டியா திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் ஸ்வெலக்ட் எச்எச்வி சோலார் போட்டோவோல்டியாக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு அதிநவீன வசதியை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய அதிகபட்ச தானியங்கி முறையிலான சோலார் பேனல் உற்பத்திக்கான வசதியை கொண்டுள்ளது. உலக சோலார் பேனல்கள் தரத்தில் உருவாக்கப்படும் இந்த பேனல்கள், 700 மெகாவாட் திறனை கொண்டதாக இருக்கும். கடந்த 2013ம் ஆண்டு முதல் பெங்களுருவில் இயங்கி வரும் 140 மெகாவாட் திறனை இது மிஞ்சுவதாகவும் புதிய தேவையை நிறைவேற்றுவதாகவும் அமைந்துள்ளது.
ஸ்வெலக்ட் புதிய உற்பத்தி மையம், நிலையான தரத்தையும், பொருளின் செயல்திறனை மேம்படுத்துவதாகவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாகவும் இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது முதலீட்டினை விரைவாக பெறுவதோடு, அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும். பசுமையான ஆற்றல் மேலாண்மையில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணியில் உள்ள ஸ்வெலக்ட், சந்தையில் பல்வேறு வகையான பொருட்களை தருவதில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக, சோலார் பொருட்கள் விநியோகம், மேற்கூரை திட்டங்கள், பெருமளவிலான ஆற்றல் தேவைக்கான திருப்பமிக்க திட்டடங்கள், மின்சார சேமிப்பு கலன் அமைப்பு சூரிய ஆற்றல் உற்பத்தியில் தனித்துவம் மற்றும் மின்னாற்றல் விற்பனை போன்றவைகளில் முன்னணியில் உள்ளது, என்றார்.
இந்நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மிருநாளினி , ரகுநாத் , நாச்சியப்பன் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் பாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.