March 25, 2023
தண்டோரா குழு
கோவை துடியலூர் அருகே அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஹன்சிதா (வயது 9). இவர் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். தாய் சுபாஷினி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.
ஹன்சிதாவிற்கு சிறு வயதில் இருந்தே கியூப் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதை வைத்து விநாயகர் உருவம், மகாத்மா காந்தி உருவம் போன்றவற்றை வரைந்துள்ளார். இதனிடையே கோவையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு பிரிவு சார்பாக ஹைபாட் என்னும் ரோபாட் தொடர்பான நிகழ்வு ஒன்று நேற்று நடந்தது. இதில் ஹன்சிதா கலந்து கொண்டு 272 கியூப்களில் ரோபாட் உருவம் வரைந்து அசத்தியுள்ளனர். இதனை கல்லூரி மாணவர்களை, பேராசிரியர்கள் வியப்புடன் பார்த்தனர்.