• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாலத்தீவின் கான் இன்டர்நேஷனல் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு 29 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்து

March 27, 2023 தண்டோரா குழு

மாலத்தீவிலும், மொரீஷியஸிலும் பிரபலமாக அறியப்படுவதுடன் இந்தியாவிலும் வேகமாக வளர்ந்துவரும் நிறுவனமான ரெனாடஸ் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், கான் (GAN) பன்னாட்டு விமான நிலையத்தை விரிவுபடுத்தவும் மற்றும் அதன் உட்கட்டமைப்பை தரம் உயர்த்தவும் 29 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மாலத்தீவு அரசாங்கத்திடமிருந்து பெற்றிருக்கிறது. ஈரோட்டை தலைமையகமாக கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

எக்ஸிம் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படவிருக்கும் இந்த விரிவாக்க திட்டத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம், தீயணைப்பு நிலையம் ஆகிய கட்டுமானப் பணிகளும் மற்றும் தற்போதுள்ள முனையம், வாகன நிறுத்த அமைவிடங்கள், சாலைகள், டியூட்டி ஃப்ரீ ஷாப்ஸ் மற்றும் உணவகங்களை புதுப்பித்தல் மற்றும் தரம் உயர்த்தல் பணிகளும் உள்ளடங்கும். இந்த மாதத்தில் தொடங்கப்படவுள்ள இச்செயல்திட்டம் 2025ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.

மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மஹாவர் மற்றும் மாலத்தீவு அரசின் பல அமைச்சர்கள் முன்னிலையில், அட்டு இன்டர்நேஷனல் விமான நிலைய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெய்ஸ் நசீர் மற்றும் ரெனாடஸ் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் தலைவர் செல்வசுந்தரம் பூசப்பன் ஆகியோரால் இது குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கட்டுமானப்பொருட்கள் உற்பத்தி மற்றும் கட்டுமானப்பணிகள் மேற்கோள்ளும் நிறுவனமான ரெனாடஸ், ரூ. 800 கோடி என்ற தற்போதைய (நிதியாண்டு 2022-23) விற்றுமுதலை 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.3500 கோடியாக உயர்த்த ஒரு மாபெரும் விரிவாக்க திட்டத்தை தொடங்கியிருக்கிறது. மாலத்தீவுகள் நாட்டில் இக்குழுமம் ஏற்கனவே நான்கு உட்கட்டமைப்பு புராஜெக்ட்டுகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் இரு சமூக வீட்டுவசதி புராஜெக்ட்டுகள் மற்றும் இந்நிறுவனமே சொந்தமாக உருவாக்கிவரும் இரு வீட்டுவசதி வளாக திட்டங்கள் இதில் உள்ளடங்கும்.

ரெனாடஸ் நிறுவனத்தின் தலைவர் செல்வசுந்தரம் பூசப்பன், இக்குழுமத்தின் விரிவாக்க திட்டங்கள் பற்றி கூறியதாவது:

“இருபது ஆண்டுகளுக்கும் அதிகமாக இத்தொழில்துறையில் நாங்கள் திறம்பட இயங்கி வருகிறோம். கட்டுமானப் பணியின் அனைத்து தேவைகளுக்கும் முழுமையான தீர்வுகளை சிறப்பாக நாங்கள் வழங்கி வருகிறோம். நன்னெறி மதிப்பீடுகளை அடித்தளமாக கொண்டு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘ஒருங்கிணைக்கப்பட்ட புராஜெக்ட் டெலிவரி’ என்ற கருத்தாக்கத்தை செயல்படுத்தி வருகிறோம். மாலத்தீவுகள் மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் பல புராஜெக்ட்களை சிறப்பாக பூர்த்தி செய்திருக்கும் நாங்கள், இந்தியாவிலும் கட்டுமானத் துறையில் முதன்மை நிறுவனங்களுள் ஒன்றாக உருவாக விரும்புகிறோம். இந்தியா முழுவதிலுமான எமது விரிவாக்க திட்டங்கள் மற்றும் இந்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் உட்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி செயல்திட்டங்களின் வழியாக 2030ஆம் ஆண்டுக்குள் எமது குழுமத்தின் விற்றுமுதல் இலக்கான ரூ. 3,500 கோடியை அடைவதற்கு எமது குழுமம் தயார் நிலையில் இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் தேவைப்படும் தொழிற்பிரிவில் நாங்கள் இருப்பதால், 2030ஆம் ஆண்டுக்குள் 30,000 – 40,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை நாங்கள் உருவாக்குவோம் என்று நம்புகிறோம்.”

அட்டு இன்டர்நேஷனல் விமானநிலைய செயல்திட்டம் பற்றி இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் பூசப்பன் பேசுகையில்,

“நாங்கள் செயல்படும் சந்தைகளில் எமது குழுமம் உருவாகியிருக்கும் ஆழமான நம்பிக்கைக்கும், நன்மதிப்புக்கும் ஒரு சான்றாக மாலத்தீவு அரசிடமிருந்து நாங்கள் பெற்றிருக்கும் இந்த கௌரவமிக்க ஒப்பந்தம் திகழ்கிறது. நிலைப்புத்தன்மை, மிதமான விலையில் திறன்மிக்க செயல்பாடு மற்றும் பங்காளர்களுக்கு மதிப்பு ஆகிய அம்சங்களில் சிறப்பான சாதனைகளை உருவாக்க வேண்டும் என்ற திடமான மனஉறுதியோடு நாங்கள் இயங்குகிறோம். மாலத்தீவுகளின் தென் பிராந்தியத்தில் சுற்றுலா செயல்பாட்டிற்கு இச்செயல்திட்டம் மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கும்; இதன்மூலம், இப்பிராந்தியத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறுவதுடன் தொழில் நிறுவனங்களும் மற்றும் இங்கு வசிக்கும் மக்களும் பலனடைவார்கள். வெளிநாடுகளிலிருந்து இத்தகைய புராஜெக்ட்களை நாங்கள் பெறுகிறபோது இந்தியாவிலும் இது, ஆக்கபூர்வ தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். எமது உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து தான் அதிகளவிலான கட்டுமானப் பொருட்களை கொள்முதல் செய்து நாங்கள் வெளிநாட்டு புராஜெக்ட்களில் பயன்படுத்துவதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் நாங்கள் சிறந்த பங்களிப்பை வழங்குகிறோம்” என்று கூறினார்.

மேலும் படிக்க