March 31, 2023
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் சிறப்பு கூட்டம் இன்று காலை துவங்கியது.இதற்கு வந்த கோவை மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்களான 5 வது வார்டு நவீன்குமார், 15 வது வார்டு சாந்தாமணி, 44 வது வார்டு காயத்திரி, 69 வது வார்டு சரவணக்குமார், 71வது அழகுஜெயபாலன், 74 வது சங்கர், 85 வது வார்டு சரளா ஆகியோர் கருப்பு சட்டை, கருப்பு சேலை, கருப்பு துண்டு ஆகியவற்றுடனும், ராகுல் காந்தி புகைப்படத்துடனும் வந்தனர்.
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இவ்வாறு வந்தனர். மேலும் வெல்லட்டும், வெல்லட்டும் காங்கிரஸ் கட்சி வெல்லட்டும் என கோஷமிட்டனர்.