• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

GOBLUE ஆட்டிசம் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வு -ஆட்சியர் துவக்கி வைப்பு !

April 2, 2023 தண்டோரா

ஆட்டிசம் பாதிப்புக்கான மூன்றாம் கண் மையம் ( Third Eye center ) மற்றும் இந்திய குழந்தை நல மருத்துவ அகடமியின் கோவை பிரிவு சார்பில், GOBLUE ஆட்டிசம் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வு ரேஸ்கோர்ஸ் மசானிக் மருத்துவமனையில் இருந்து துவங்கியது. இந்த வாக்கத்தான் நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஆட்டிசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மருத்துவர்கள், குழந்தைகள், ஆட்டிச பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளின் பெற்றோர் என, 300க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
வாக்கத்தான் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே, ஆட்டிசம் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குவது தான். ஆட்டிசத்தால் உலகளவில், 44ல் 1 குழந்தை பாதிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை காட்டிலும் ஆண் குழந்தைகளின் பாதிப்பு அதிகம் உள்ளது.
இது குறித்து மூன்றாம் கண் ஆட்டிசம் மையத்தின் இயக்குனர் சரண்யா ரெங்கராஜ் கூறுகையில்,

எனது நம்பிக்கையின் படி, ஆட்டிசம் குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியானது. ஆட்டிசம் என்பது ஒரு வகையான வளர்ச்சிக்கோளாறு, தனிப்பட்ட ஒவ்வொருவரையும் வெவ்வேறு வகையில் பாதிக்கிறது. இதுசார்ந்த விழிப்புணர்வு இன்மையால், பலர் தன் குடும்பங்களில் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சாவால்களை புரிந்து கொள்வதில்லை.
ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதால், தனிபருக்கும், சமூகத்திற்கும் , பாதிக்கப்பட்ட நபர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், அறிகுறிகள், தினசரி வாழ்கையை எவ்வாறு பாதிக்கும் என்ற புரிதலை ஏற்படுத்தும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைந்த சமூக சூழல் உருவாக வழிவக்கும். அவர்களை தவறான நடத்துவதும், பாகுபாடு காட்டும் செயல்பாடுகள் குறையும்.
இதுதவிர, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர் சமூக ஆதரவையும், அவர்களுக்கான வாய்ப்புகளையும் பெறமுடியும். இக்குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் காணப்படும் ஒரு வித தயக்கம், அவமான எண்ணத்தால் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் கிடைக்கவேண்டிய உதவிகள், சிகிச்சைகள் தடைபடுகின்றன. ஆரம்ப நிலையில் கண்டறிதல், சிறப்பு கல்வி திட்டங்கள், சிகிச்சை முறைகள் மூலம் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வியலை மேம்படுத்த இயலும்; போதிய விழிப்புணர்வு இன்மையால் இவை அனைத்தும் பாதிக்கப்படுகிறது என்றார்.

ஐ.ஏ.பி (இந்திய குழந்தை நல மருத்துவ அகடமியின் கோவை பிரிவு )தலைவர் டாக்டர் சி. ஸ்ரீனிவாசன் கூறுகையில்,
விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் வாயிலாக, ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் இரக்கமுள்ள, புரிந்துகொள்ளும் உலகத்தை உருவாக்கமுடியும். இவ்விழிப்புணர்வு நிகழ்வின் மூலம், பொதுமக்கள், பெற்றோர் மத்தியில் அவர்களின் கண்ணோட்டத்தை மாற்றவும், ஆரம்பத்தில் கண்டறிந்து குழந்தைகளின் வாழ்கை சூழலை மேம்படுத்தவும் உதவும்’’ என தெரிவித்தார்.

மேலும் படிக்க