April 3, 2023 தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் முதலீட்டுத் தளங்களில் ஒன்றான அப்ஸ்டாக்ஸ், தனிநபர்கள், எங்கு முதலீடு செய்ய வேண்டும், எப்போது முதலீடு செய்ய வேண்டும் மற்றும் மிக முக்கியமாக ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிய உதவுவதற்காக, ‘இன்வெஸ்ட் ரைட்’ “சரியாக முதலீடு செய்யுங்கள்” என்ற புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் புதிய சீசனின் தொடக்கத்துடன் இந்த பிரச்சார வெளியீடு ஒத்திருக்கும். அப்ஸ்டாக்ஸ் டாடா ஐபிஎல் இன் ஒரு அதிகாரப்பூர்வ கூட்டாளராக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஐபிஎல் மாற்றப்பட்டு, இந்திய கிரிக்கெட்டுக்கு புதிய பாதையை வழங்கியதைப் போலவே, இந்தியா எவ்வாறு முதலீடு செய்கிறது என்பதை எளிமையாகவும், உள்ளுணர்வு மற்றும் ஈடுபாட்டுடன் செய்வதற்கு, அப்ஸ்டாக்ஸ், இந்த பிரச்சாரத்தின் மூலம் மாற்றியமைக்க முயல்கிறது.
அவர்களின் முந்தைய ஐபிஎல் பிரச்சாரமான ‘ஸ்டார்ட் கர்கே தேகோ’வைக் கட்டமைத்து, இது இந்தியர்களை முதலீடு செய்வதற்கான முதல் படியை எடுக்க ஊக்குவித்ததால், இந்த ஆண்டு பிரச்சாரம் ‘சரியாக முதலீடு செய்யுங்கள்’ பிரச்சாரத்திற்கு கவனத்தை மாற்றுகிறது. இன்று, தனிநபர்கள் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், ஆனால் தேர்வுகள் பலவாக இருப்பதால் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள். எனவே அவர்களுக்கு உதவ, அப்ஸ்டாக்ஸ் இந்த அனைத்து கடின சுமை மற்றும் கடின உழைப்பை வழங்கி, எளிமைப்படுத்தப்பட்ட முதலீடு செய்வதை இலகுவாக்கியுள்ளது.
இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது மற்றும் சமபங்கு பங்கேற்பின் மூலம் இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றிலிருந்து ஒருவர் பயனடையமுடியும் என்ற வலுவான நம்பிக்கையுடன், அப்ஸ்டாக்ஸ் -இன் இந்த முக்கிய பிரச்சாரமானது, இந்தியாவில் ஒருவர் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பதைச் சுற்றி கவனம் செலுத்துகிறது. அவர்களை இன்டெக்ஸ் ஃபண்டுகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், சந்தையின் செயல்திறனைக் கண்காணிப்பதற்கான ஒரு வழியாக அப்ஸ்டாக்ஸ், பணவீக்கத்தை முறியடித்து அவர்களின் செல்வத்தை வளர்த்துக் கொள்ள செலவு குறைந்த, எளிதான மற்றும் நீண்ட கால தீர்வை வழங்குகிறது.
ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளுக்குள், ஒருவர் பல தேர்வுகளையும் கொண்டுள்ளார். எனவே இதை மேலும் எளிமைப்படுத்த, நூற்றுக்கணக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அவற்றின் ஆபத்து மற்றும் வெகுமதி விகிதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு பகுதியிலும் சில முதன்மையானவைகளை மதிப்பிடும் மாபெரும் பணியை அப்ஸ்டாக்ஸ் மேற்கொண்டுள்ளது. நிதிகளின் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் மற்றும் நிபுணர் பகுப்பாய்வு மூலம், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த பயன்பாட்டின் உள் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்க பிராண்ட் முயல்கிறது. முதலீட்டாளர் நன்கு அறியப்பட்ட முடிவுகளை எடுக்க உதவுகின்ற, தகவல் மற்றும் ஆராய்ச்சியையும், இந்த பிராண்ட் வழங்குகிறது.
இந்த அம்சத்திற்கு கூடுதலாக, அப்ஸ்டாக்ஸ், முதலீட்டின் எளிய உண்மைகளைப் பற்றி இந்தியர்களுக்குக் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒருவர் 12.5 சதம் வருமானம் தரும் வெறும் ஒரு ரூ.5000 எஸ்ஐபி யைத் தொடங்கி, சந்தையில் 25 வருடங்கள் முதலீடு செய்து காத்திருக்கும்போது, கூட்டு திறனை வெளிப்படுத்தி, அவர்களின் பணம் ஒரு கோடியாக வளரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இதைப் போலவே, பின்பற்றுவதற்கு எளிமையான மற்ற அறிவூட்டும் உண்மைகளை, அப்ஸ்டாக்ஸ் வழங்குகிறது. ஒவ்வொரு உண்மையுடனும், பயனர்கள் வெற்றிபெற உதவுவதற்கு அவை செயல்படக்கூடிய படிகளை வழங்குகின்றன. இந்த பிரச்சாரம் முழுவதும் மியூச்சுவல் ஃபண்டுகள், தொழில்நுட்ப பகுப்பாய்வு, ஆப்சன் டிரேடிங் மற்றும் பலவற்றில் தொடர்ச்சியான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கற்றல் அமர்வுகளை, அப்ஸ்டாக்ஸ் நடத்துகிறது. இதன் மூலம், தனிநபர்களுக்கு, அப்ஸ்டாக்ஸ் உடன் கற்றுக் கொள்ளவும், முடிவு செய்யவும், முதலீடு செய்யவும் மற்றும் வர்த்தகம் செய்யவும் அவர்களுக்கு உதவுகிற, முதலீடு செய்வதற்கான ஒரு முழுமையான, அனைத்தும் உள்ளடக்கிய அணுகுமுறையை வழங்குவதை, அப்ஸ்டாக்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த செய்தியை மேலும் வலியுறுத்த, வழக்கமான, தினசரி சூழ்நிலைகளில் இடம்பெறும் நபர்களை இந்த விளம்பரப் பிரச்சாரம் முன்னிலைப்படுத்துகிறது. உதாரணமாக, சாலையோர இளநீர் விற்பனையாளருக்கு இரண்டு நண்பர்கள் யுபிஐ-ஐப் பயன்படுத்தி பணம் செலுத்துகிறார்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்பதன் சாத்தியமான நன்மைகளை எடுத்துக்காட்டி, கதாபாத்திரங்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவரிடமும் குழுஎம்ஒ ஐத் தூண்டுவதற்கு இந்த சம்பவத்தை இந்த பிரச்சாரம் பயன்படுத்துகிறது. இந்த முடிவான பதிலானது, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள், இன்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள் என்ற அதிக நிதி ரீதியாக நுண்ணறிவு பாத்திரம் மூலம் கொடுக்கப்படுகிறது. பின்னர், இந்த நபர், அவர்கள் சிறந்த முடிவை எடுக்க முடிவதற்கு அவர்களுக்கு கல்வி கற்பித்ததற்காக அப்ஸ்டாக்ஸ் நிறுவத்திற்கு நன்றி கூறுகிறார்,
இது போன்ற காட்சிகள் மூலம், முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்வு, பரிசீலனை மற்றும் பிராண்ட் ஆர்வத்தை அதிகரிப்பதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பிரச்சாரத்தில் பேசிய அப்ஸ்டாக்ஸ் -இன் இணை நிறுவனர் கவிதா சுப்ரமணியன்,
“மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு தங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்தவும், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சித் சாத்தியத்தில் பங்கேற்கவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நிதி உள்ளடக்கம் இன்றியமையாதது என்று நாங்கள் நம்புகிறோம். அப்ஸ்டாக்ஸ் இல், தரமான முதலீட்டு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஒவ்வொரு முதலீட்டாளரும் அணுக வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாக இருக்கிறது. இது சம்பந்தமாக, எங்களின் புதிய பிரச்சாரமானது, இந்தியாவில் உள்ள அதிகமான மக்களுக்கு, அவர்களுக்கு தேவையான கருவிகள், வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் சரியான நிதிகளின் வகையில் முதலீடு செய்ய உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களுக்கும் அவர்களின் நிதிகளை நிர்வகிப்பததற்கும், தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அவர்களுக்குத் தேவையான அறிவு மற்றும் நம்பிக்கையுடன் அவர்களை மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,
நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும், தரமான முதலீட்டு ஆலோசனைகளை அதிகமான மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலமும், மேலும் வளமான பொருளாதாரத்தை உருவாக்க எங்களால் உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.
இந்தியாவில் பிராந்தியங்கள் முழுவதும் அடுக்கு 2 மற்றும் 3 பிரிவுகளை மையமாகக் கொண்டு, 18 முதல் 35 வயதுடைய நபர்களை நோக்கி இந்த பிரச்சாரம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல், சமூகம் மற்றும் செய்தி தாள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி இயங்கும், மேலும் இலக்குப் பிரிவினரிடையே விழிப்புணர்வையும் கவனத்தையும் செலுத்துவதற்கு நேரடி செயல்பாடுகளால் ஆதரிக்கப்படும்.