• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு பிரத்யங்கிரா தேவி திருக்கோவில்

January 16, 2017 findmytemple.com

சுவாமி : பிரத்யங்க தேவி

தலச்சிறப்பு :

குழுமணி அக்ரஹாரம் நுழையும் போது நம்மை வரவேற்கிறது. ஸ்ரீ அன்னையின் ஆலயம். ஸ்ரீ வலம்புரி விநாயகரின் பின்புறம் ஸ்ரீ ஜய மங்கள மஹா பிரத்யங்க தேவியின் நேர் பார்வையில் 25 துவாரங்கள். இதன் காரணம் என்ன. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் மறு உருவம் ! ஆம் பத்து பிறவிகளில் செய்த பாவங்கள் நீக்கப்பட்டு புனிதராக தாய் அருள்பார்வை அளிக்கிறாள். அடுத்து 15 துவாரங்கள் மாதத்தில் இரண்டு பட்சங்கள். ஒவ்வொரு பட்சதிற்கும் உரிய பதினைந்து நாட்களில் ஸ்ரீ அம்பாளை தரிசிப்பவர்கள், அம்பாளின் பரிபூரண அருளை பெற்று, இவ்வுலக வாழ்வில் தேவையான தனம், தானியம், கல்வி, நல்மனம், நோயற்ற உடல் போன்ற 16 பேறுகளை பெறுபவர் என்பது ஐதீகம்.

தல வரலாறு :

பிரத்யங்கிரஸ், அங்கிரஸ் என்ற இரண்டு முனிவர்கள் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு உரிய மந்திரங்கள் உருவாக்கியவர்கள். அதனால்தான் இந்த இரு முனிவர்களின் பெயர்களையே தனக்கு ‘பிரத்யங்கிரா’ என்று நாமமாகத் தரித்துப் பெருமைபடுத்துகிறாள் இத்திருக்கோவிலை வலம் வரும்போது சிரஞ்சீவியாய் இருந்து நல்லருள் தருகிறாள் . இங்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஒருவர் அல்ல இருவர் காட்சி தருகிறார்கள். முதலில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், அடுத்து ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர். திருக்கோவிலில் வலம் வந்து நிமிர்கிறோம். நமக்குள் ஓர் புத்துணர்வு. நெகிழ்வு புரிதல் குணம், நம்பிக்கை ஒளி கிடைக்கிறது. அம்பாளின் பார்வை வடதிசை நோக்கி உள்ளது. அவளுடைய மூன்று பக்கங்களிலும் ஸ்ரீ மகாலெட்சுமி, ஸ்ரீ ஜயமங்களா, ஸ்ரீ வாக்தேவி ஆகியோர் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர்.

நடைதிறப்பு : காலை 9 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,மாலை 6 மணி முதல் இரவு 8.00 மணி வரை

பூஜை விவரம் : அமாவாசை நன்னாளில் காலையில் அம்பாளுக்கு அபிஷேகம்,மாலையில் பிரத்யங்கிரா ஹோமம்.

அருகிலுள்ள நகரம் : திருச்சி

கோயில் முகவரி : பிரத்யங்கிரா தேவி திருக்கோவில், குழுமணி, ஸ்ரீ ரங்கம்(வட்டம்), திருச்சி மாவட்டம்.

மேலும் படிக்க