January 16, 2017
தண்டோரா குழு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசும், டீசல் ரூ.1.03 உயர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதன் விளைவாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.இது திங்களன்று அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை அந்தந்த மாநிலங்களின் வரிகளுக்கு ஏற்ப அமையும். நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி கூறுகையில்,
“பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சர்வதேச உற்பத்தி விலையின் அளவும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் விளையும் கணிசமாக உயர்ந்து வருவதையொட்டி இந்த விலை உயர்வு அமைகிறது. சர்வதேச எண்ணெய் சந்தையில் விலைகளின் இயக்கம் கூர்ந்து கவனிக்கப்படும். சந்தையில் வளரும் முறைகள் எதிர்கால விலை மாற்றங்களை பிரதிபலிக்கும்” என்றார்.
கடந்த ஆறு வாரங்களில் பெட்ரோல் விலை நான்கு முறையும், டீசல் விலை ஒரு மாதத்தில் மூன்று முறையும் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.