April 10, 2023
தண்டோரா குழு
கோவை குறிச்சி வடக்கு பகுதி கழகம் சார்பில் போத்தனூரில் தமிழக முதலமைச்சர், கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேஷ் வழிகாட்டுதலில் ஆதிதிராவிட நலபிரிவு துணைச்செயலாளர், கிணத்துக்கடவு
சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் பொன்தோஸ் தலைமையில், குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் எஸ்.ஏ.காதர் முன்னிலையில் குறிச்சி வடக்கு பூத் கமிட்டி அமைப்பது மற்றும் கழக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் 10 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தலைமை செயற்க்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், குறிச்சிப்பிரபாகரன், நாகராஜ சோழன்,மஜ்சு சௌமியா, ராஜமாணிக்கம்,ஜின்னா,பகுதி நிர்வாகிகள். வார்டு செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.