• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துருக்கி சரக்கு விமானம் தரையில் மோதி 37 பலி

January 16, 2017 தண்டோரா குழு

துருக்கி நாட்டு சரக்கு விமானம் ஒன்று கிர்கிஸ்தானில் தரையிறங்க முயன்றபோது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து காலையில் பிஷ்கேக் விமான நிலையத்தில் திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு நடந்தது.

துருக்கி நாட்டைச் சேர்ந்த அந்த விமானம் ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டு, துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. வழியில் பிஷ்கேக் நகரில் சிறிதுநேரம் நிறுத்த விமானி முயன்றபோது, அங்கு கடுமையான பனி சூழ்ந்திருந்தது.

அதனால், அந்த விபத்து டச்சா சூ என்ற கிராமத்தில் வீடுகளின் மீது விழுந்தது.இதில், விமானத்தில் இருந்தவர்களும் கிராமவாசிகள் 32 பேரும் இறந்தனர்.

இது குறித்து அந்நாட்டின் அவசர சேவை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில்,

“கிர்கிஸ்தான் விமான நிலையத்தின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் 32 பேர் 4 விமானிகளும் உயிரிழந்தனர். கடும்பனியில் தரையிறங்க அந்த விமானம் முயன்றதால் இந்த விபத்து நேர்ந்தது.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் வழியாக ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து இஸ்தான்புலுக்கு பயணம் செய்த துருக்கி விமானம் உள்ளூர் நேரத்தின்படி, திங்கள்கிழமை காலை 7.3௦ மணியளவில் விபத்துக்குள்ளானது. இறந்த 32 மக்கள் டசா-சூ கிராமத்தை சேர்ந்தவர்கள்” என்றார்.

பிஷ்கேக் விமான நிலைய நிர்வாகம் கூறுகையில், “ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து இஸ்தான்புலுக்கு பயணம் செய்த துருக்கி விமானம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கு அருகில் உள்ள மானாஸ் நகரில் தரையிரங்க வேண்டியது. ஆனால் மூடுபனி காரணமாக காலை 7.3௦க்கு விபத்துக்குள்ளானது” என்றது.

துருக்கி விமான நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டரில், “இந்த விபத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்” என்று பதிவிட்டிருந்தது.

அவசர அமைச்சகம் நெருக்கடி மேலாண்மை மையத்தின் தலைவர் முஹம்மத் சவரோவ் கூறுகையில், “அந்த விமானம் விழுந்ததில் 15 கட்டடங்கள் நொறுங்கின” என்றார்.

மேலும், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறுகையில், “15 கிராமத்தினர் மற்றும் ஒரு விம்மனியில் இறந்த உடல்களை மீட்பு தொழிலாளர்கள் மீட்டுள்ளனர்” என்று கூறியது.

மேலும் படிக்க