• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வலைதளங்களில் வீரர்கள் குறைகளைத் தெரிவிக்கக்கூடாது -ராணுவத் தலைவர்

January 16, 2017 தண்டோரா குழு

“சமூக வலைதளங்கள் மூலம் வீரர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பது விதிகளை மீறும் செயலாகும்” என இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் எச்சரித்துள்ளார்.

புது தில்லியில் ராணுவ தின கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பாகப் பணியாற்றிய ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகளை விபின் ராவத் வழங்கினார்.

அதன் பின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

“ராணுவ வீரர்களுக்குக் குறை ஏதும் இருந்தால், அது குறித்துப் புகார் தெரிவிக்க முறையான அமைப்பு உள்ளது. அந்த வழியை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அந்தப் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் வீரர்களுக்குத் திருப்தியில்லை என்றால், என்னை நேரடியாக அவர்கள் தொடர்பு கொள்ளலாம். அதற்கு மாறாக, சமூக வலைதளங்கள் மூலம் வீரர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பது, விதிகளை மீறும் செயலாகும்.

இது போன்ற செயல்கள் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் செயலாகும். தீரத்துடன் எல்லையில் காவல் காக்கும் வீரர்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தி விடும். எனவே, சமூக வலைதளம் மூலம் குறைகளைத் தெரிவிக்கும் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

நமது நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபடுகிறது. இருப்பினும் எல்லையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே நாட்டின் விருப்பமாகும்” என்றார்.

மேலும் படிக்க