April 24, 2023
தண்டோரா குழு
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்
திருமண மண்டபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அது போன்ற அனுமதி வழங்கப்படாது எனவும்
எந்த நிகழ்ச்சிகளிலிலும் மதுபானங்கள் பயன்படுத்த அரசு அனுமதிக்காது எனவும் தெரிவித்தார். மேலும் ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது எனவும்.
ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்பதற்கும் சொத்து பட்டியலை வெளிவிடுவேன் என்பதற்கு வித்தியாசம் உள்ளது என்றும் குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் வெளியீடு செய்துள்ளார் எனவும் கூறியதுடன் சொத்துக்கள் அனத்திற்கு கணக்கு உள்ளது எனவும் கூறினார்.