• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டேலிசொல்யூஷன்ஸ், ‘எம்எஸ்எம்இ ஹானர்ஸ்’ மூன்றாம் பதிப்பை அறிவித்துள்ளது

April 27, 2023 தண்டோரா குழு

சாஃப்ட்வேர் தயாரிப்புத் துறையில் முன்னோடியாகத் திகழும் டேலி சொல்யூஷன்ஸ், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான (SMBs) வணிக மேலாண்மை தீர்வுகளை வழங்கி வரும் ‘MSME ஹானர்ஸ்’இன் இந்த மூன்றாவது பதிப்பை அறிவித்தது.

இது, தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பிற்காக வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர்களை அடையாளம் காணும் வருடாந்தர முயற்சியாகும். தொடக்க நிலையில் அவர்களின் சிறந்த நடைமுறைகள் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அவற்றின் பன்முகத்தன்மை மற்றும் சமூகத்தில் அவை ஏற்படுத்தும் நன்மையான தாக்கத்திற்காக, இந்த விருதுகள் அங்கீகரித்து பாராட்டும். இது, நகரங்கள், பிரிவுகளின் அடுக்குகளில் உள்ள உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும் பொருளாதாரத்தை உந்தும் அறியப்படாத ஜாம்பவான்கள் பாராட்டப்படுவதை உறுதிசெய்வதை ஒரு உள்ளடக்கிய அங்கீகாரமாக இதை அமைக்கிறது.

250 கோடி ரூபாய்க்கும் குறைவான விற்றுமுதல் மற்றும் செல்லுபடியாகும் GSTIN உள்ள அனைத்து வணிகங்களும் இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தில் பங்கேற்க முடியும். ஆர்வமுள்ள தொழில்முனைவோர் அல்லது அத்தகைய தொழில் முனைவோரை அறிந்தவர்கள் தங்கள் உள்ளீடுகளை https://tallysolutions.com/msme-honours மூலம் 2023 மே 10 தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

MSME ஹானர்ஸ் இன் இரண்டாவது பதிப்பு நாடு முழுவதும் உள்ள 1,487 நகரங்கள் மற்றும் பட்டணங்களில் இருந்து சுமார் 2,000 பரிந்துரைகளைப் பெற்றது, மற்றும் 98 வணிகங்கள், சர்வதேச MSME தினமான ஜூன் 27, 2022 அன்று நடைபெற்ற நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டன. வெற்றியாளர்கள் சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், பாட்காஸ்ட்கள் போன்றவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டனர். இந்த ஆண்டு, இந்தியாவுக்கும் கூடுதலாக, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேஷியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறந்த வணிகங்களையும் இந்த முயற்சி பாராட்டுகிறது.

பங்களிப்புகள் மற்றும் சாதனை வரலாறுகளின் பன்முகத்தன்மையை உண்மையாக முன்னிலைப்படுத்துவதற்காக, MSME ஹானர்ஸ் கீழ்க்கண்ட 5 பிரிவுகளில் கௌரவிக்கப்படும்:

வொண்டர் வுமன்: தங்கள் லட்சியங்களைத் தொடரும் மற்றும் இன்றைய வணிகங்களை மறுவரையறை செய்துள்ள பெண் தொழில்முனைவோரை அங்கீகரித்தல்

·பிசினஸ் மேஸ்ட்ரோ: காலத்தின் சோதனையைத் தாங்கி, தொடர்ந்து வளர்ந்து வரும் சாதனையாளர்களை அங்கீகரித்தல்.

·நியூஜென் ஐகான்: சந்தை தேவையைக் கண்டறிந்து புதுமையான தீர்வுகளை அறிமுகப்படுத்திய தொடக்க நிறுவனங்களை அங்கீகரித்தல்.

·டெக் டிரான்ஸ்ஃபார்மர்: மேம்பட்ட விளைவுகளுக்காக அதிநவீன தொழில்நுட்பத்தை விரைவாக மாற்றியமைக்கும் நிறுவனங்களை அங்கீகரித்தல்.

·சாம்பியன் ஆஃப் காஸ்: உலகளாவிய நல்வாழ்வுக்கான சிறந்த நோக்கத்திற்காக பங்களித்த வணிகங்களை அங்கீகரித்தல்.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த டேலி சொலுஷன்ஸ் -இன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஜெயதி சிங்,

“பாரம்பரிய நீண்ட கால வணிகங்கள் மற்றும் பிற தொடக்க நிறுவனங்களின் பரந்த வரம்பை உள்ளடக்கிய குறு, சிறு நடுத்தர வணிகங்கள், உலகப் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்புகளுக்காக மட்டும் கொண்டாடப்பட வேண்டியவையல்ல, ஆனால் புதுமை மற்றும் வளர்ச்சியின் சில சாதனைகளுக்காகவும் கூட கொண்டாடப்படவேண்டியவையாகும். MSME ஹானர்ஸ் இன் இந்த 3 வது பதிப்பு, அளவு, பிராந்தியம், வணிக வகைகள் மற்றும் காலம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையில் இந்தத் தொழில்முனைவோரின் இந்த மிகவும் சாதனையான வரலாறுகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தளத்தின் மூலம், இந்திய நகரங்கள் மற்றும் பட்டணங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குரல் கொடுக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்.

மேலும் அவர்களின் தனித்துவமான பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துகிறோம். நாட்டின் தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மேலும் மேம்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு தளங்களில் இவை ஆண்டு முழுவதும் பகிரப்படும்.” என்று கூறினார்.

மேலும் படிக்க