April 27, 2023
தண்டோரா குழு
பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும் தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார்.அப்போது இளம் பெண் வெயிலின் தாக்கத்தால் அப்பெண் அங்கிருந்த போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை நிழலில் வந்து நின்றார்.
அப்போது இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் கிஷோர்குமார் (27) கைக்குழந்தையை வாங்கி கொண்டு, இளம் பெண்ணை அங்கிருந்த இருக்கை அமரக்கூறியதோடு தண்ணீர் வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து அவரது தாய் வாங்கி வந்த உணவை சாப்பிடும் வரையிலும் சுமார் 20 நிமிடங்கள் குழந்தையை காவலர் கிஷோர்குமார் தூக்கி வைத்திருந்தார்.கடும் வேலைக்கு இடையே போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.