• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் பங்கேற்கும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் – டீம் ஸீ சக்தி

April 28, 2023 தண்டோரா குழு

ஐரோப்பாவின் மொனாக்கோ எனர்ஜி படகு சவால் (MEBC) 2023க்கு தகுதி பெற்ற ஒரே இந்திய அணியான குமரகுருவை சேர்ந்த 10 மாணவர்களைக் கொண்ட குழு
நாட்டிலேயே முதல் முறையாக ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் YALI 2.0 என்ற படகை வடிவமைத்துள்ளனர்.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு குமரகுரு கல்லூரியில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் கிரண்,

MEBC ஆனது புகழ்பெற்ற Yacht Club De Monaco (YCM) ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது கடல்சார் துறையில் மின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தாத மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் படகுகளை உருவாக்க மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கிறது. டீம் ஸீ சக்தி என்ற 10 பேர் கொண்ட மாணவர்கள் குழு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சர்வதேச சவாலுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடத்தின் கற்றல் மூலம் இம்முறை அணி மிகவும் வலுவாக உருவெடுத்துள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த படகு ஹைட்ரஜன் எரிபொருள் கலத்தால் இயக்கப்படுகிறது.புகழ்பெற்ற Yacht Club De Monaco (YCM) ஆல் நடத்தப்படும் MEBC 2023 இந்த ஆண்டு ஜூலையில் நடக்க உள்ளது. இதில் TSS அணியும் ஒன்றாகும். இந்தக் TSS குழு, பேட்டரி மற்றும் சோலார் பேனல் ஆகியவற்றை சக்தி ஆதாரங்களாகக் கொண்டு “யாலி” என்ற இந்தியாவின் முதல் ஆற்றல் படகை உருவாக்கியது.இந்த ஆண்டு மீண்டும் TSS, MEBC க்கு தகுதி பெற்றுள்ளது.

கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட அதன் காக்பிட் உடன் YALI 2.0 8.4kWh லித்தியம் அயன் பேட்டரியின் முன்-செட் முதன்மை ஆற்றல் மூலம் 2kW எரிபொருள் செல் மற்றும் 400W இன் இரண்டாம் மூல சோலார் பேனல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க