April 29, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை 30.04.2023-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு தங்களது சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கடைசி வாய்ப்பாக இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதுதவிர, அந்தந்த வார்டுகளில் சிறப்பு வரி வசூல் முகாம் மேற்கண்ட இரு தினங்களும் நடைபெறுகிறது.
எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, சொத்துவரியை முறையாக செலுத்தி, மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.