• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்த ஆண்டு 10 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

April 29, 2023 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வருகின்ற 2050க்குள் கோவை முழுவதுமாக கார்பன் சமநிலையை எட்டுகின்ற வகையில் என்னென்ன திட்டங்கள் தொடங்கலாம் என்பதன் அடிப்படையில் இன்று கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.குறிப்பாக மின்சார துறை போக்குவரத்து துறை மற்றும் தொழிற்சாலைகள் மூலமாக கார்பன் அதிகளவு வெளியேற்றப்படுகிறது. எனவே இந்த மூன்றில் இருந்தும் கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, கோவை முழுவதுமாக வனத்தின் பரப்பளவுகளை அதிகரித்து எங்கெங்கெல்லாம் பொது இடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மரங்களை நடவு செய்து கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான நிலைகளை எட்டுவது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவுகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மற்றும் கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளின் அதிகாரிகளுடன் இந்த கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.

காலநிலை மாற்றத்தினுடைய மிஷன் டைரக்டராக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர்கள் மூலமாக எதிர்காலத்தில் கோவை மாவட்டம் முழுவதுமாக கார்பன் சமநிலை என்ற நிலையை எட்டுவதற்கான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு 2 கோடிக்கும் மேலாக மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக கோவையில் மட்டும் 10 லட்சம் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு அந்த இலக்கை அதிகப்படுத்துவோம் என கூறியுள்ளனர். அதேபோல இந்த ஆண்டு 10 கோடி மரங்களை நடவு செய்ய வேண்டும் என்று இலக்கினை நோக்கி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அரசாங்கம் மட்டுமல்லாமல் தன்னார்வலர்களும் ஒவ்வொருவரும் முன்வந்து மரங்களை நடவு செய்தால் இந்த இலக்கை எளிதாக எட்ட முடியும். எனவே அனைவரும் உலகம் வெப்பமயமாதலை தடுப்பதற்கு மரங்களை நடவு செய்யுங்கள், இயற்கையையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்ச பைகளை உபயோகப்படுத்துங்கள். செங்கல் சூளை குறித்தான கேள்விக்கு, கடந்த ஆண்டுமுதல் தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக மலையை ஒட்டிய பகுதியில் செங்கல் சூளை என்பது தடை செய்யப்பட்டுள்ளது, இதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், கிட்டத்தட்ட 5000 மெகா வாட் மின்சாரத்தை காற்றாலை மூலமாக உற்பத்தி செய்வது என்ற அறிவிப்பை தந்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் திண்டுக்கல், கன்னியாகுமரி கோவை ஆகிய மாவட்டங்களில் காற்றாலை அதிகமாக உள்ளது. வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த பயனும் இல்லை, அவ்வாறு எங்கேனும் வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டு இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்.

காயில் தொழிற்சாலைகளை பொறுத்த வரை அவர்கள் பயன்படுத்துகின்ற நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது. பொள்ளாச்சியில் காயில் இண்டஸ்ட்ரி நீர் நிலைகளில் பாதிப்பு ஏற்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞரின் பேனா சிலை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது அதில் அவர்கள் என்னென்ன வழிகாட்டு வழிமுறைகள் அறிவித்துள்ளார்களோ அதன்படி அந்த பேனா சிலை அமைக்கப்படும். வரம்பு மீறி செயல்படும் குவாரிகள் குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க