• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன்

May 2, 2023 தண்டோரா குழு

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறார் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து, சிறார்கள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

சீர்திருத்தப் பள்ளியாக செயல்பட வேண்டிய கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்றும், சுகாதாரமற்ற சூழ்நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இப்படி குழந்தைகள் வாழ முடியாத அளவுக்கு மோசமான சூழல் இருப்பதால்தான் சிறார்கள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

சிறார் கூர்நோக்கு இல்லங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.சுகாதாரமான, சத்தான உணவு,போதிய இட வசதி தேவையான உடைகள்,சுத்தமான கழிவறைகள், குளியல் வசதி,யோகா,உடற் பயிற்சி செய்வதற்கான ஏற்பாடுகள் என அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கூர்நோக்கு இல்லங்களில் பொறுப்பாளராக இருக்கும் அதிகாரிகள், கண்டிப்பானவராக மட்டுமல்லாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படும் கனிவானவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை மட்டுமே கூர்நோக்கு இல்லங்களில் நியமிக்க வேண்டும்.

ஏனெனில், குழந்தைகள்தான் நம் நாட்டின் எதிர்காலம். அவர்கள்தான் நாட்டின் செல்வங்கள். இதனை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க