May 3, 2023
தண்டோரா குழு
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவானால் காலமானார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் மனோபாலா (69). இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.
அதன் பின் பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில்,கல்லீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் மனோபாலா இன்று உயிரிழந்தார்.அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.