• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ 7 லட்சம் மதிபீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம்- பி.ஆர்.நடராஜன்எம்பி.,வழங்கினார்

May 3, 2023 தண்டோரா குழு

ரூ 7 லட்சம் மதிபீட்டில், மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை சம்பந்தப்பட்ட பயணாளிகளுக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி., புதனன்று வழங்கினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியினை பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்து வருகிறார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் பயன்பெரும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதியில் சமூதாய கூடங்கள் அமைப்பது, மாவட்டத்தின் உட்புற கிரமப்பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைப்பது, குழந்தைகளுக்கான அங்கன்வாடி, சத்துணவு கூடங்கள் அமைப்பது, ரேசன் கடைகள் அமைப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பெறுவதற்கு என முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்.

இதன்தொடர்ச்சியாக கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகள் எட்டு பேருக்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை பெருவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். தலா ஒரு வாகனம் ரூ 83 ஆயிரத்து 500 மதிப்பீட்டில், எட்டு வாகனங்களுக்கு ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் நிதியில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வரவழைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு காந்திபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பி.ஆர்.நடராஜன் எம்பி., தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோ.வசந்த ராம்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், யு.கே.சிவஞானம், ஆர்.கோபால், வி.ஆர்.பழனிசாமி மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உதவியாளர்கள் நல சங்கத்தின் ,மாநில குழு உறுப்பினர் விஜயராகவன், அமைப்பு குழு உறுப்பினர் இளையராஜா தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், சூலூர், கோவை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாகனத்தை பெற்றுக்கொண்டு பி.ஆர்.நடராஜன் எம்பி.,க்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க