• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.1.4 கோடி அபராதம் வசூல்

May 4, 2023 தண்டோரா குழு

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனைகளில் டிக்கெட் இல்லாமல் பயணம், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றின் மூலம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 112 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் கூறியிருப்பதாவது:

பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய, சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழு உறுப்பினர்கள் ரயில் மற்றும் ரயில்வே வளாகங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சோதனைகளின் போது, டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர்.

அதன் படி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சோதனையில் 10 ஆயிரத்து 47 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததைக் கண்டறிந்து, அவர்கள் இடமிருந்து ரூ.79 லட்சத்து 45 ஆயிரத்து 455 அபராதமாக வசூல் செய்யப்பட்டது. அதே போல் 5069 பேர் முறைகேடான பயணங்கள் மேற்கொண்டது கண்டறியப்பட்டு, அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.24 லட்சத்து 85 ஆயிரத்து 769 வசூலிக்கப்பட்டது.

மேலும் முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்லுதல் ஆகிவற்றில் 60 முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதற்கு அபராதமாக ரூ.25 ஆயிரத்து 888 வசூல் செய்யப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புப் குழுவினர் அபராதமாக வசூலித்த மொத்தத் தொகை ரூ.1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 112 ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க