May 7, 2023 தண்டோரா குழு
இந்தியவிடுதலையின் 75 ஆம் ஆண்டு நினைவையொட்டி இந்திய மக்களுக்கு அதன் வளமான கலைப்பண்பாட்டுப் பெருமைகளையும், வரலாற்றையும், சாதனைகளையும் நினைவூட்டும் நிகழ்வாக ஆசாதிஹா அம்ரித் மஹோத்சவ் (AKAM) என்னும் பெரும் இசைநிகழ்வை இந்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
இப்பெரும் நோக்கத்தோடு கூடிய இந்நிகழ்வை இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம், ஸ்பிக் மக்காய் (SPIC MACAY) என்ற அமைப்போடு இணைந்து நடத்துகிறது.தேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்குபெறும் இசைப்பெரு நிகழ்வைப் பொறுப்பேற்று நடத்தும், ஸ்பிக் மக்காயோடு,கோவை குமரகுரு கல்வி நிறுவனம் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.
இந்திய பாரம்பரிய இசையின் அழகை, நாடு முழுவதிலுமிருந்து வரும் புகழ்பெற்ற கலைஞர்களின் தேர்ந்த அளிப்பு வரிசையில் கண்டுகளிக்கும் உங்களை அழைக்கிறது குமரகுரு கல்லூரியில் ராமானந்த அடிகளார் அரங்கில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல் நிகழ்வாக, சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற கோபிகா வர்மாவின் மோகினியாட்டத்துடன்துவங்கியது.அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நிகழ்வாக சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற பண்டிட் உதய் பவால்கரின் துருபத் இசை நிகழ்ச்சி
நடைபெற்றது.
இரண்டாவது நாள் நிகழ்வு மே 7ம் தேதி , பத்ம விபூஷன் விருது பெற்ற பண்டிட் ஹரிபிரசாத் சௌரஷியாவின் ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் இசைக்கச்சேரி. அதைத் தொடர்ந்து, பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருதுகளைப் பெற்ற சாய்ராமின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது.இந்நான்கு நிகழ்ச்சிகளும் இசைப்பிரியர்களுக்குத் தனித்தன்மையுடன் கூடிய உவப்பூட்டும் நிகழ்ச்சிகளாக அமைந்தது.