May 8, 2023 தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று 12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் பெற்று முதலிடத்தையும்,திருப்பூர் 97.79 சதவீதம் பெற்று 2ஆம் இடத்தையும், பெரம்பலூர் 97.59 சதவீதம் பெற்று 3 ஆம் இடத்தையும் கோயமுத்தூர் 97.57 சதவீதம் பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
கோவை மத்திய சிறையில் 1500 க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டணை சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் இந்த ஆண்டு 12 சிறைவாசிகள் 12 ம் வகுப்பு தேர்வினை எழுதினர்.இதில் தேர்வு எழுதிய சிறைவாசிகள் 12 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில்
எஸ்.கார்த்திகேயன் என்ற சிறைவாசி 481 மதிப்பெண்கள் பெற்றார்.சுபாஷ் சந்திரபோஷ் என்ற சிறைவாசி 461 மதிப்பெண்களும்,சந்தீப் என்ற சிறைவாசி 460 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இதே போல் கோவை மாநகராட்சியில் உள்ள 33 பள்ளிகளில் ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அது போல் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 158 மாற்றுத் திறனாளிகளில் 149 பேரும் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21 பார்வௌயற்றோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.