• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

May 8, 2023 தண்டோரா குழு

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பல்வேறு கட்சியினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக குகி- மெய்ட்டி என்ற இரு பிரிவினர்களுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின.இதனை தடுக்க அரசும் இராணுவத்தை இறக்கி பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த கலவரத்தில் குகி பிரிவினரின் தேவாலயங்களை மெய்ட்டி மக்கள் குறிவைத்து தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இந்த தாக்குதலில் தற்போது வரை 25க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று தேவாலயங்கள் தீவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இதில் எஸ்டிபிஐ கட்சியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அங்கு நிலவும் மத மோதல்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் பெண்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

D.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் A.முஸ்தபா
மாநில செயற்குழு உறுப்பினர்
V M.அபுதாஹிர், மாநில செயலாளர் வர்த்தக அணி A.அப்துல் கரீம்
SDTU தொழிற்சங்கம் மாநில பொதுச் செயலாளர் ‌N.ரகுபு நிஸ்தா,தந்தை பெரியார் திராவிட கழகம்
பொதுச்செயலாளர் கு ராமகிருட்டிணன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி கோவை மண்டல தலைவர் சுசி கலையரசன்,தமிழ் புலிகள் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் மு இளவேனில்,
காந்திபுரம் CSI சர்ச் பாதிரியார்
டேவிட், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மத்திய மாவட்ட செயலாளர்கிறிஸ்டி சகாயம், மேற்கு மாவட்ட செயலாளர் ஜோசப்ராஜ்
எஸ்.டி.பி.ஐ செய்தி தொடர்பாளர்
மன்சூர்,கோவை தெற்கு தொகுதி செயலாளர், K. ஷாஜகான் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்துகொண்டனர்

மேலும் படிக்க