May 10, 2023
தண்டோரா குழு
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை சிந்தாமணி சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இன்று காலை 11 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.அதன்படி மேட்டுப்பாளையம் ரோடு – சிந்தாமணி சந்திப்பு வழியாக டி.பி.ரோடு, வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம் செல்லும் வாகனங்கள், கிழக்கு பெரியசாமி ரோடு வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. மாற்றாக, கிழக்கு பாஷியகாரலு ரோடு வழியாக சென்று, தங்களது பயணத்தை
மேற்கொள்ளலாம்.
அதே போல் கிழக்கு பெரியசாமி ரோடு வழியாக, சிந்தாமணி சந்திப்பு -மேட்டுப்பாளையம் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, பொது மக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.