May 12, 2023 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் தலசீமியாவுக்கு என சிறப்பு பிரிவு ஒன்று அன்மையில் துவங்கப்பட்டது. இதில் தலசீமியா பாதிக்கப்பட்ட 23 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.
இது குறித்து டீன் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் 23 குழந்தைகள் தலசீமியா என்ற ரத்த அணுக்கள் சம்மந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த அணுக்கள் சராசரி நாட்களை விட முன்கூட்டியே அழியும் தன்மை கொண்டுள்ளது.
எனவே, குழந்தைகள் ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒரு முறை வந்து ரத்தம் ஏற்றி கொள்ள வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ரத்த அணுக்கள் ஏற்றும் நிலை இருக்கிறது. இவர்களை மருத்துவமனையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்க வைத்து ரத்தம் ஏற்றப்படும். இதற்காக 14 படுக்கைகள் கொண்ட டே கேர் சென்டர் உள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் உதவியுடன் 6 குழந்தைகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் நலமுடன் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.