May 12, 2023
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் கடந்த 8-ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், தாவரவியல், பி.காம் உள்ளிட்ட 23 படிப்புகள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், 1,433 இடங்கள் நிரப்பப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் பதவி செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 19-ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். அறிவியல் பாடங்களை விட, கலை பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.