May 15, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம்சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இப்பொருட்காட்சியில் செய்தி – மக்கள் தொடர்புத்துறை,சுற்றுலாத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறைஇ வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப் பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை,நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை,மாற்றுத் திறனாளிகள் நலத்துறை,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன் வளத்துறை ஆகிய 27 அரசுத் துறைகளும் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்கள் சார்பிலும் இப்பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
அரசுப்பொருட்காட்சியை காண பொதுமக்கள் ஆர்வமுடன் குடும்பத்துடன் வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் இன்று கூட்டம் அலைமோதியது.இதனிடையே அரசு பொருட்காட்சியில் நேற்று மாலை போலீஸார் சார்பில் போலீஸாரின் வளர்ப்பு நாய்கள் சாகச கண்காட்சி நடைபெற்றது.இதில் நாய்கள் சாகசங்களில் ஈடுபட்டு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தின. பொதுமக்கள் ஆர்வமுடன் இதனை கண்டுகளித்தனர்.