May 17, 2023
தண்டோரா குழு
ஹஜ் யாத்திரை மேற்கொள்வோர்க்கு தமிழக அரசு சார்பில் சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் புனித யாத்திரையாக கருதப்படும் ஹஜ் யாத்திரையை அதிகமானோர்மேற்கொள்வர்கள்.இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தடுப்பூசி (Meningococcal and Seasonal Influenza Vaccine) செலுத்தப்படுகிறது.மேலும் சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது.
அதன் படி கோவையில் சுகாதாரதுறை அலுவலகத்தில் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து செலுத்தும் சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.இதில் கோவை, நீலகிரி பகுதிகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டு சொட்டு மருந்தை எடுத்து கொண்டனர்.