January 17, 2017
தண்டோரா குழு
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகளும் பேரனும் பாரதீய ஜனதா கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது உருவச் சிலைக்கும், எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்ஜி சக்கரபாணியின் மகள் லீலாவதியும் அவரது மகன் பிரவீணும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.
பிரதமர் மோடியின் நேர்மையைப் பார்த்து பாஜக-வில் இணைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களில் லீலாவதி எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.