May 20, 2023 தண்டோரா குழு
சாய் பல்கலைக் கழகம் சென்னை (சாய்யு), இந்தியாவில் செயல்படும் சர்வதேச அளவிலான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக் கழகம் கலை,அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சட்டம் சார்ந்த பாடத் திட்டங்களில் சுதந்திரமான கற்பித அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.
சாய்யு சுதந்திரமான கல்விக்கான பாடத்திட்ட முறையை பின்பற்றி இளங்கலை மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறது.
இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் சாய் பல்கலைக் கழகம் மாணவர்கள், பெற்றோர் இடையிலான கருத்தரங்கை நடத்தியது. இதில் சாய்யு சுதந்திரமான கற்பித முறை எதிர்காலத் தலைவர்களை எவ்விதம் உருவாக்குகிறது என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான கே.விர ரமணி கூறியதாவது,
தற்போதைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் பன்முக திறன் பெற்ற சுதந்திர கல்வி பயன்ற நிபுணர்களைத்தான் எதிர்நோக்குகிறது. சாய் பல்கலைக்கழகம் இளங்கலை பட்ட வகுப்பில் உள்ளீடான பாடத்திட்டம் மற்றும் சுதந்திரமான கற்பித அணுகுமுறையை பின்பற்றுகிறது. இங்கு கல்வி போதிக்கும் பேராசிரியர்களில் 30 சதவீதம் பேர் ஸ்டான்போர்டு,ஹார்வர்டு பல்கலை பேராசிரியர்களாவர்.மீதமுள்ள 70 சதவீத பேராசிரியர்கள் சர்வதேச அளவிலான கல்வி மையங்களின் முன்னாள் பேராசிரியர்கள் என்று குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஜம்ஷெட் பரூச்சா கூறியதாவது,
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் படிப்பு முடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் போதிய திறன் பெற்றவர்களாக இருப்பதில்லை. இவர்களால் தொழில்துறை எதிர்பார்க்கும் திறமை மிக்கவர்களாக இருப்பதில்லை.இதற்குக் காரணம் வழக்கமான பாடத்திட்ட போதனை முறையாகும். ஆனால் சாய் பல்கலையில் மாணவர்களின் கற்பனைத் திறனை தூண்டிவிட்டு சுதந்திரமான சிந்தனை செயல்பாட்டுடன் இயங்க அனுமதிக்கிறோம்.மாணவர்கள் பல்வேறு துறை சார்ந்து சிந்திக்க அனுமதிக்கிறோம். மற்றபடி வழக்கமான பாடத்திட்ட வரையறைக்குள் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை.
இந்த நிகழ்ச்சியில் சாய்யு பல்கலையில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மற்றும் அங்கு பயிலும் மாணவர்கள், பல்கலையின் வேந்தர், துணை வேந்தர் பங்கேற்றனர். புதிதாக சேரும் மாணவர்களுக்கு பேராசிரியர்கள் பற்றிய விவரம் தரப்பட்டது. சுதந்திரமான கற்பிதத்தில் போதிக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்த விவரமும் அளிக்கப்பட்டது.