May 22, 2023 தண்டோரா குழு
சமூக வலைத்தளங்களில் சர்ச்சை பதிவுகள் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் பிரியாணி ஜிஹாத் என்ற பெயரில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்பனை செய்வதாகவும்,முஸ்லிம்களுக்கு மட்டும் கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணி விற்பனை செய்வதாகவும்,அதை போலீஸ் கண்டறிந்து உள்ளதாகவும் அவதூறு பரப்பும் வகையில் டிவிட்டரில் பொய்யான பதிவுகள் வெளியாகின.
இதை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து இந்த பதிவுகளை வெளியிட்ட 9 பேர் மீது சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் புகார் அளித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் அருண்,9 டிவிட்டர் பதிவர்கள் மீது 4 சட்ட பிரிவுகளில் நேற்று வழக்கு பதிவு செய்தார்.
தொடர்ந்து இவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.இவ்வாறு சமூகவலைத்தளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.