May 24, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் அனைத்து வகையான மகளிர் விடுதிகள் உரிமம் பெறவில்லை என்றால் உரிய சான்றிதழ்களை பெற்று www.tnswp.com என்ற இணையதளம் வாயிலாக பதிவு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட சமூகநலத் துறையில் உரிய பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஏற்கனவே உரிமம் பெற்று செயல்பட்டு வரும் விடுதிகள் தங்களது பதிவு உரிமம் புதுப்பித்தலின் போது இந்த இணையதளம் வாயிலாக பதிவு மேற்கொள்ள வேண்டும்.
எனவே கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அனைத்தும் இணையதளத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பாக மாவட்ட சமூகநல அலுவலக தொலைப்பேசி எண்: 0422-2305126ல் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
___