May 27, 2023 தண்டோரா குழு
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய செங்கோல் அங்கே செல்ல இருக்கிறது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு 10:45 மணிக்கு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் எல்லாம் அதனை எடுத்துச் சென்று மான்பேட்டனிடம் கொடுத்து திரும்ப வாங்கி மீண்டும் நேருவிடம் கொடுத்து மக்களாட்சியாக அது வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த செங்கொலை நாம் எங்கும் பார்த்தது கிடையாது. தற்போது அந்த செங்கோல் பாராளுமன்றத்தில் இருக்கப் போகிறது. வருகின்ற காலத்தில் செங்கோல் இல்லாமல் ஆட்சி இல்லை என்ற அளவிற்கு பிரதமர் பெருமை சேர்த்துள்ளார். இதனை கலந்த சில தினங்களாக எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதீனமே விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து எம்பிக்களும் இதில் பங்கேற்க வேண்டும்.
இந்த பாராளுமன்ற கட்டிடம் புதிதாக வரக்கூடிய எம்பிகளுக்கும் சேர்த்தே விசாலமாக கட்டப்பட்டுள்ளது. இது போன்ற ஒன்று நூறு வருடங்கள் கழித்தாலும் கிடைக்காது. எம்பிக்கள் இதில் பங்கேற்கவில்லை என்றால் இது ஒரு சரித்திர பிழையாக மாறிவிடும். எந்த ஒரு அரசியலையும் சாராத பிரதமர், அவர் ஒரு கட்சியை சார்ந்திருந்தாலும் பிரதமர் என்கின்ற அந்த வார்த்தை அரசியல் கட்சியை தாண்டி இருக்கக்கூடிய ஒரு வார்த்தை. தற்போது உள்ள எதிர்க்கட்சியினர் நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்.
தமிழகத்தை தற்போது மிகப்பெரிய அளவில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான்.அவர்கள் தவறு செய்து இருக்கிறார்கள் அதனால் சோதனை நடைபெறுகிறது. முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது கரூர் பொது கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என அவரை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது சகோதரர் அசோக்கின் பெயரையும் கூறிவிட்டு வந்துள்ளார்.
தற்போது திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தவுடன் அவர் ஒரு புண்ணியவான் என்று ஆர் எஸ் பாரதி கூறுகிறார். இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சோதனையானது இறுதி கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதை எங்களது எதிர்பார்ப்பு. பீகாரில் எல்லாம் சோதனை நடைபெறும் பொழுது யாருக்கும் ஒரு கீறல் கூட விடவில்லை ஆனால் தற்பொழுது கரூரில் சோதனைக்கு சென்று அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பையும் திமுக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு பக்கம் அண்ணாமலை சாதாரண ஆள் என்று கூறிவிட்டு சோதனை என்று வரும்போது அதற்கும் அண்ணாமலை தன் காரணம் என்று கூறுகிறார். முதலமைச்சர் வெளிநாடு செல்ல வேண்டும் அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம் வெளிநாடு சென்று விட்டு வரும்பொழுது எதனைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இதற்கு முன் அவர் துபாய் சென்று வந்தது குறித்தும் பல்வேறு அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்.
உதயநிதி பவுண்டேஷன், ரெட் ஜெயன்ட் மூவி எல்லாம் மணிலாண்டரி, திமுக வந்த பிறகு பல்வேறு விஷயங்களை மணிலாண்டாரியாக மாற்றி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த வருமானவரித்துறை சோதனை ஒரு இரு நாட்களில் முடிவது போல் தெரியவில்லை. தமிழகம் தற்போது இந்தியாவில் நான்காவது பொருளாதார மாநிலமாக உள்ளது. இந்நிலையில் மதுவிற்கு அடிமையாகி வந்தால் பஞ்சாப்பை போல் மதுவிற்கு அடிமையான மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும். அதேபோல் நடைபெறுகின்ற சோதனைகளுக்கு என் மீது பழி போடுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டையே சாராய மாநிலமாக மாற்றி இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் சோதனையை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வருமான வரித்துறை அறிக்கை வெளியிடும் வரை நாம் பொறுத்திருக்கலாம்.
2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதத்திற்குள் மாற்றிவிட பிரதமர் கூறினால் அது டிராமா என சொல்கிறார்கள். பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்தால் அதனையும் பாஜகவின் டிராமா எனக் கூறுகிறார்கள். அதேபோல் தற்பொழுது சோதனை நடைபெற்றால் அதனையும் டிராமா எனக் கூறுகிறார்கள். அப்படி என்றால் நீங்கள் எதை செய்தீர்கள் என மக்களிடம் தெரிவியுங்கள்.
DMK files எவ்வளவு நீட்டாக உள்ளது என்பதை நீங்கள் பாருங்கள். அந்த இரண்டாம் பாகம் முழுவதுமே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பது தான் அதில் இருக்கும். என் மண் என் மக்கள் என்ற பயணம் ஜூலை ஒன்பதாம் தேதி துவங்க உள்ளது. அந்த பயணத்தில் ஊழலை பற்றி மட்டும்தான் பேச உள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு செல்லும் பொழுதும் அங்குள்ள திமுகவின் ஊழலை பற்றி தான் பேசப் போகிறோம். DMK FILES 2ல் திமுகவை சேர்ந்தவர்களும் திமுகவை சாராதவர்களும் இருக்கிறார்கள். ஜூன் 10ஆம் தேதிக்குள் பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளோம். அந்த வெள்ளை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டங்கள், 75% டாஸ்மாக்கை மூடுவது, கள் மூலமாக வரக்கூடிய வருமானம் வருமான இழப்பை சரி செய்வது அனைத்தையும் நாம் கூறியுள்ளோம். அதை வைத்து ஒரு டிபைட் நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை.
DMK FILES 2 வை கோவையில் வெளியிடுவோம். என்னை எந்த அரசியலில் கட்சி இருக்கக் கூறுகிறதோ ஒரு ரூபாய் பணம் கூட அளிக்காமல் தேர்தலில் நிற்பேன். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழலை சுட்டிக் காட்டுவது போல் ஆட்சியில் இருந்தவர்கள் செய்ததையும் கூற வேண்டிய கடமை உள்ளது என்றார்.