• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

P4U புதிய மொபைல் செயலி கோவையில் அறிமுகம்

May 31, 2023 தண்டோரா குழு

கோவையில் உலகிலேயே முதன் முறையாக P4U புதிய மொபைல் செயலி அறிமுகம் கோவை அவினாசி சாலையில் உள்ள சிட்ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

விழாவில் கௌரவ விருந்தினர்களாக கோவை கே. ஜி.மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர்.பக்தவச்சலம் பேசும் போது :- ஈஸ்ட் ஆர் வெஸ்ட் கோயம்புத்தூர் ஈஸ் பெஸ்ட். விஜய் யின் இந்த புராடக்ட் உலகம் முழுவதும் வைரலாக வேண்டும். பில்கேட்ஸ் போல இவர் புகழ் பெறுவார் என வாழ்த்துகிறேன் என்றார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி டாக்டர் கலியமூர்த்தி, புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி பேசும் போது :- வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பாரதியாரின் சவாலுக்கு ஒப்ப, இங்கு தன் அயராத முயற்சியால் எழுந்து பிரகாசிக்கிறார். அவரோடு செந்தில்குமார், ரகுபதி, பிரசன்னா என எழுச்சி இளைஞர்கள் குழுவாக உள்ளனர்.விஜய் இன்று தகவல் தொழில் நுட்பத்தில் சாதனை இளைஞர். இந்தியாவின் வாழ்க்கைப் பாதையை தகவல் தொழிநுட்பத்துறையில் தனித்துவமிக்க பாதையாக மாற்றிக்காட்டவுள்ளார்.டூ ஆர் டை எனும் வைராக்கியம் இளைஞர்களுக்கு அவசியமான பண்பாக இருக்க வேண்டும். விஜய் தொடர் உழைப்பை மேற்கொள்பவர் என்பதால் தான், அவரது அயராத முயற்சிக்கு இப்போது, இந்த அதிநவீன மொபைல் ஆப், சர்வதேச தரத்திலான இந்திய மொபைல் ஆப் வெளியாகியுள்ளது என்றார்.

விழாவில் அக்குபஞ்சர் டாக்டர் நித்தியானந்தம், ஸ்ரீவாரி நிறுவனத்தின் தலைவர் ராமசாமி விழாவில் கலந்து கொண்டார். விஜய் டிவி புகழ் கீக்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை புகழ் அசார் மற்றும் டி எஸ் கே அவர்களின் பல குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள யூடியூபர்கள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர்.

புதிய செயலி குறித்து பிளான்நெக்ஸ்ட்4U சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் எஸ்பி. விஜய் மற்றும் பிரியங்கா விஜய் ஆகியோர் கூறும்போது :-

P4U எனப்படும் இந்த புதிய செயலி மிக விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது கூகிள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும். இதில் பொழுது போக வருமானமாக மாற்றுவது சமூக ஊடகத்தில் பதிவு போட்டால் வருமானம் இதில் பிரபலமாக வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச தரத்தில் இந்தியாவில் உருவாகியுள்ள புதிய மொபைல் அப் இதுவாகும். இந்த ஒரே செயலியில் இ-காமர்ஸ் உட்பட நான்கு வகையான செயல்பாடுகள் உள்ளது. பொருட்களை வாங்குவது, விற்பது, சேவைகள் மற்றும் சமூக வலைதளம் ஆகியன இடம்பெற்றுள்ளன. உங்களிடம் உள்ள பொருட்களை விற்க வேண்டுமெனில் P4U – வில் பதிவு செய்தல் போதுமானது. கூடிய விரைவில் தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதன் அறிமுக விழா களம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அந்நிறுவனத்தின் சேர்மன் எஸ்பி விஜய் தலைமையில் நடைபெற்றது. மேலும் விழாவில் இச்செயலியின் தொழில்நுட்ப இயக்குனர் பரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க